யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
1620 ஆம் ஆண்டு [[யாழ்ப்பாண அரசு]] போத்துக்கீசரிடம் வீழ்ச்சியடைந்தபோது '''யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி''' உருவானது. இவ்வாண்டிலேயே போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தின் ஆட்சியைத் தங்கள் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்தபோதும், 1590 ஆம் ஆண்டிலிருந்தே போத்துக்கீசர் செல்வாக்குக்கு உட்பட்டே [[ஆரியச் சக்கரவர்த்திசக்கரவர்த்திகள்|யாழ்ப்பாண அரசர்கள்]] ஆட்சி செய்து வந்தனர்.
 
இவர்கள் யாழ்ப்பாண அரசின் தலைநகரை [[நல்லூர்|நல்லூரிலிருந்து]] இன்றைய யாழ்ப்பாண நகருக்கு மாற்றினர். யாழ்ப்பாணத்தில் ஒரு [[யாழ்ப்பாணக் கோட்டை|கோட்டையையும்]] கட்டி அதற்கு வெளியே இன்று பறங்கித் தெரு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு நகரத்தையும் அமைத்தார்கள்.