"தில்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
உரையாடலை காணவும்#
(உரையாடலை காணவும்#)
 
== பெயர் ==
தில்லிடெல்லி என்னும் பெயர்த் தோற்றம் பற்றித் தெளிவு இல்லை. எனினும், இப்பெயர் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் கூறப்படுகின்றன. [[மௌரியர்|மௌரிய]] வம்சத்தைச் சேர்ந்த ''டில்லு'' அல்லது ''டிலு'' எனப் பெயர் கொண்ட மன்னனால் கி.மு. 50 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நகருக்குத் அவனது பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர் தில்லி ஆனதாகப் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இங்கே அரசர் ''தாவா'' என்பவரால் நிறுவப்பட்ட இரும்புத் தூண் ஒன்றின் அத்திவாரம் உறுதியற்றதாக இருந்ததாகவும் இதனைக் குறித்து நகரம், [[இந்தி]] / [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிகளில் ''தளர்வு'' என்னும் பொருள்படும் ''டிலி'' என்று அழைக்கப்பட்டதாகவும் இதிலிருந்து ''தில்லி'' என்னும் பெயர் ஏற்பட்டது என்பதும் இன்னொரு சாரார் கருத்து. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்பகுதியில் புழங்கிய நாணயம் ''தெஹ்லிவால்'' எனப்பட்டது. சில ஆய்வாளர்கள் இப்பெயர் ''வாயிற்படி'' என்னும் பொருள் கொண்ட ''தெஹ்லீஸ்'' அல்லது ''தெஹாலி'' என்னும் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்து-கங்கைச் சமவெளிப் பகுதிக்கு ஒரு வாயிலாகத் தொழிற்பட்டதாலேயே இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நகரின் தொடக்ககாலப் பெயர் ''தில்லிக்கா'' என்பது வேறு சிலருடைய கருத்து.
 
== வரலாறு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1424477" இருந்து மீள்விக்கப்பட்டது