வரகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,964 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
==வரகின் பயன்பாடு==
இந்த தானியத்தை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
 
==சாகுபடி முறை==
 
* ஆடிப் பட்டம், வரகு சாகுபடிக்கு ஏற்றது.
* இதன் வயது 5 மாதங்கள்.
* அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது.
* மழை பெய்து முடிந்த பிறகு, மண்ணில் அதிக ஈரம் இல்லாமல், புட்டுப்பதத்தில் இருக்கும் போது, இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 7 கிலோ விதையைப் பரவலாக விதைத்து, மீண்டும் ஒரு சால் உழவு போடவேண்டும்.
* ஈரப்பதம் இருப்பதைப் பொருத்து, 7 முதல் 10 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும்.
* விதைப்பு செய்த பிறகு மழை இல்லாமல் இருந்தாலும், மழை பெய்தவுடன் முளைத்து விடும்.
* களை எடுக்கத் தேவையில்லை, பூச்சி, நோய், பறவைகள் போன்ற பிரச்னையில்லை, உரம், பூச்சிக்கொல்லி தேவையில்லை.
* இளம் பயிராக இருக்கும்போது, மாடுகள் மேய்ந்தாலும், பயிர் மீண்டும் அதிகமான கிளைப்புடன் வளர்ந்து விடும்.
* நான்காம் மாதத்தில் கதிர் பிடிக்க ஆரம்பித்து, ஐந்தாம் மாதத்தில் முற்றி அறுவடைக்கு வந்து விடும்.
* ஒரு குத்துக்கு 15 முதல் 20 சிம்புகளும், சிம்புக்கு 5 முதல் 8 கதிர்களும், கதிருக்கு 150 முதல் 200 மணிகளும் இருக்கும்.
* அறுவடை செய்ய ஆட்கள் வேண்டிய அவசியமில்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் நெல் அறுவடை இயந்திரங்களை வைத்தே அறுவடை செய்யலாம்.
* ஏக்கருக்கு சராசரியாக 15 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்கும்.
 
==கபிலர் பாடலில் வரகு==
290

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1424506" இருந்து மீள்விக்கப்பட்டது