சமதா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox_Indian_Political_Party
|party_name = சமதா கட்சி
|party_logo = [[]]|
|leader = பிரமானந்த மண்டல்
|foundation = [[ஜார்ஜ் பெர்னான்டஸ்]], 1994
|alliance =
|ideology = சமதர்மம்
|publication = []
|headquarters = #201ஏ, கரியப்பா மார்க், சைனிக் பார்ம், [[புதுதில்லி]] - 110062
|website = http://www.samataparty.com/
|party_flag = [[படிமம்:AIADMK flag.png|140px]]
 
}}
 
'''சமதா கட்சி''' என்பது இந்திய அரசியல் கட்சிகளுள் ஒன்றாகும். [[1994]] ஆம் ஆண்டில் [[ஜனதா தளம்]] கட்சியில் இருந்து பிரிந்த [[ஜார்ஜ் பெர்னான்டஸ்]] மற்றும் [[நிதீஷ் குமார்]] ஆகியோர் இக்கட்சியைத் தொடங்கினர். [[1996]] ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத்தேர்தலில் [[பாரதீய ஜனதா கட்சி]]யுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சிக்கு [[பீகார்]] மாநிலத்தில் இருந்து ஆறு மக்களவை உறுப்பினர்களும், [[உத்தரப்பிரதேசம்]] மாநிலத்திருந்து ஒரு மக்களவை உறுப்பினரும், [[ஒடிசா]] மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும் என எட்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பீகார் மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற இக்கட்சி [[1998]] ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பத்து மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து இரண்டு மக்களவை உறுப்பினர்களும் என பன்னிரண்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பெற்றனர். [[2003]] ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சமதா கட்சி [[ஐக்கிய ஜனதா தளம்]] கட்சியுடன் இணைக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்தார். ஆனால், பிரமானந்த மண்டல் என்பவர் தலைமையிலான இக்கட்சியின் ஒரு குழுவினர் இந்த இணைப்பை ஏற்க மறுத்தனர். அவர்கள் சமதா கட்சி எனும் பெயரில் செயல்படத் தொடங்கினர்.<ref>[http://www.samataparty.com/ பிரமானந்த மண்டல் தலைமையிலான சமதா கட்சியின் இணையதளம்] </ref> 2007 ஆம் ஆண்டில் சமதா கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் சமதா கட்சிக்கு வந்தனர்.<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2006-04-14/india/27808357_1_george-fernandes-nitish-kumar-p-k-sinha Times of India] </ref> இதற்கிடையில் என்.கே. சிங் என்பவர் தலைமையில் ஒரு குழு சமதா கட்சி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.<ref>[http://samataparty.org.in/ என்.கே.சிங் தலைமையிலான சமதா கட்சியின் இணையதளம்] </ref> இப்படி சமதா கட்சி எனும் பெயரில் பல்வேறு குழுக்கள் தங்களுக்கென்று தனித் தலைமையைக் கொண்டு இயங்கி வருகின்றன. பிரமானந்த மண்டல் தலைமையிலான சமதா கட்சியினை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.<ref>[http://www.hindu.com/2004/03/21/stories/2004032104480801.htm இந்து நாளிதழ் செய்தி]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சமதா_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது