பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 108 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்*
வரிசை 4:
[[நீர்|நீரானது]] வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது [[நீர்மம்|நீர்ம]] (திரவ) நிலையிலிருந்து [[திண்மம்|திண்ம]] நிலைக்கு [[உறைதல்|உறையும்போது]] தோன்றும் திண்மப் பொருளே '''பனி''' (Ice) ஆகும். இது [[ஒளி]] ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள [[வளிமம்|வளிமத்தின்]] அளவிலேயும் தங்கியிருக்கும். [[மண்]] போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.
 
பனியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து [[வளிமண்டலம்|வளிமண்டலத்தினூடாக]] விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் '''[[பனித்தூவி]]''' (Snow or Snowflakes) எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது '''[[ஆலங்கட்டி மழை]]''' (Hail) எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் கூரான ஈட்டி போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை '''[[பனிக்கூரி]]''' (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனி சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை '''[[பனியாறு]]''' (Glacier) என்பர். [[கடல்]] நீரானது [[உப்பு|உப்பை]]க் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °[[செல்சியசு|C]] (28.8 °[[பரனைட்டு|F]])) அடையும்போது உறைந்து '''[[கடல் பனி]]யாக''' (Sea ice) மாறும். [[நீராவி]]யானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனித்தூளாக உறைந்த நிலையில் காணப்படும்போது அதனை '''[[பனிப்பூச்சு]]''' (Frost) எனலாம். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000&nbsp;km² க்கு குறைவான பரப்பிலாயின் '''[[பனிப்படுக்கை]]''' (Ice cap) எனவும், 50 000&nbsp;km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் '''[[பனிவிரிப்பு]]''' (Ice sheet) எனவும் அழைக்கப்படும் <ref name=DougBenn>{{cite book
| last = Benn
| first = Douglk
வரிசை 34:
| isbn=978-3-642-03414-5}}</ref>.
 
பனியானது [[புவி|புவியின்]] கால்நிலையைப் பேணுவதிலும், நீரின் சுழற்சியிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தவிர [[குளிர்காலம்|குளிர்கால]] [[உடல் திறன் விளையாட்டு|விளையாட்டுக்கள்]], [[குளிர்பானம்|குளிர்பாங்கள்]] தயாரிப்பு, பனிச் [[சிற்பம்]] செய்யும் [[கலை]] போன்ற பல [[பண்பாடு|பண்பாட்டு]]சார் பயன்களைத் தருகின்றது. பனியிலிருந்து பெறப்படும் [[பனி உள்ளகம்|பனி உள்ளகங்கள்]], நீண்டகால அடிப்படையில் புவியில் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றங்களை அறியவும், அதன்மூலம் காலநிலையின் காலவரிசையை அல்லது வரலாற்றை அறியவும், அதனை ஆய்வு செய்வதனால், தற்கால அல்லது எதிர்கால காலநிலையை விளைவு கூறவும் உதவுகின்றது.
 
== படத்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது