மத்தேயோ ரீச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
மத்தேயோ ரீச்சி 1552ஆம் ஆண்டு மசேரடா, திருத்தந்தை நாடுகளில் பிறந்தார். [[உரோமை]]யில் இயேசு சபை பள்ளியில் இறையியலும் சட்டமும் பயின்ற இவர், அச்சபையில் 1571ஆம் ஆண்டு இணைந்தார். 1577இல் இந்தியாவுக்கு சென்று மறைப்பணியாற்ற விண்ணப்பித்தார். மார்ச் 1578இல் [[லிஸ்பன்]] நகரில் பயனத்தை துவங்கி [[கோவா (மாநிலம்)|கோவா]]வை செப்டம்பர் 1578இல் அடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இவர் சீனா அனுப்பப்பட்டார்.
 
ஆகஸ்ட் 1582இல் இவர் சீனாவில் [[மக்காவு]] வந்தடைந்தார்.<ref>Gallagher (trans) (1953), pp. 131-132, 137</ref> சீனர்களுக்கு சேவை செய்த இவர், அவர்களுக்கு சூரிய கிரகணத்தை துள்ளியமாக கணக்கிட்டு உதவியதால் வாளி பேரரசரால் அரசவைக்கு அழைக்கப்பட்டு அரச ஆலேசகராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு [[பேரரண் நகரம்|பேரரண் நகரத்துக்குள்]] நுழைந்த முதல் வெளிநாட்டவர் இவர் ஆவார்.<ref>Chan Kei thong. Faith of Our Father, China Publishing Group Orient Publishing Centre, Shanghai China</ref> [[பெய்ஜிங்]]கில் உள்ள அமல உற்ப்பவ அன்னை பேராலயத்தை கட்டியவர் இவரே. இவ்வாலயமே இன்நகரின் மிகப்பழைய கிறித்தவ ஆலயமாகும்.<ref>(Chinese) [http://www.china.org.cn/english/features/beijing/31024.htm "The Tomb of Matteo Ricci" ''Beijing A Guide to China's Capital City''] Accessed 2010-10-05</ref> இவரே சீனர்களுக்கு இயந்திர கடிகாரங்களை அறிமுகம் செய்தவர். சீன கெய்ஃபேங் யூதர்களை (Kaifeng Jews) முதன்முதலில் மேற்கத்தியருக்கு அறிமுகம் செய்தவர் இவரே.<ref name=white>White, William Charles. ''The Chinese Jews''. New York: Paragon Book Reprint Corporation, 1966</ref>
 
சீன நிலப்படத்தை முதன் முதலில் வரைந்தவர் இவரே. இவ்வேலை எவ்வளவு கடினமானதாயின் இவரின் இப்படைப்பு “Impossible Black Tulip” என அழைக்கப்படுகின்றது.<ref name="Baran">{{cite news|url=http://minnesota.publicradio.org/display/web/2009/12/16/tulip-map/|title=Historic map coming to Minnesota |last=Baran|first=Madeleine |date=December 16, 2009|publisher=Minnesota Public Radio|accessdate=12 January 2010|location=St. Paul, Minnesota. }}</ref> [[கன்பூசியம்|கன்பூசிய]] படைப்புகளை இலத்தீனுக்கு சூ குவாங்குயி என்பவரருடைய துணையால் மொழிபெயர்த்தார்.<ref Name="Mungello">{{cite book
| last =Mungello
| first =David E.
| authorlink =
| coauthors =
| title =Curious Land: Jesuit Accommodation and the Origins of Sinology
| publisher =University of Hawaii Press
| year =1989
| location =
| url =http://books.google.com/books?id=wb4yPw4ZgZQC
| doi =
| id =
| isbn=0-8248-1219-0
| pages =46–48}}.</ref>
 
தனது 57ஆம் அகவையில் மே 11, 1610இல் இவர் இறந்தார். அக்காலத்தில் இறந்த வெளிநாட்டவர்களை [[மக்காவு]]விலே அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. குறிப்பாக [[பேரரண் நகரம்|பேரரண் நகரத்துக்குள்]] அடக்கம் செய்யக்கூடாது என்னும் சட்டமும் இருந்தது. ஆயினும் ரீச்சி சீனர்களுக்கு செய்த சேவையினைப்பாராட்டி அவரை பேரரண் நகரத்துக்குள்ளே அடக்கம் செய்ய அரசர் அனுமதித்தார்.<ref>[http://www.china.org.cn/english/features/beijing/31024.htm The Tomb of Matteo Ricci]</ref> இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் அடக்கப் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் என்னும் பெருமையை இவர் அடைந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மத்தேயோ_ரீச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது