மேற்குலக மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
==மேற்குலக மெய்யியலின் துணைத் துறைகள்==
மேற்குலக மெய்யியலாளர்கள், பல பிரிவுகளாக அல்லது சிந்தனைக் குழுக்களாகப் பிரிந்து இருப்பதைக் காணலாம். மெய்யியல் துறையின் வெவ்வேறு பகுதிகள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதனாலும், கருத்தியல் அடிப்படையிலான வேறுபாடுகளினாலும் இப்பிரிவுகள் உருவாகின்றன. பழங்காலத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியது, [[ஏரணம்]], [[நெறிமுறை]], இயற்பியல் என்பவற்றைக் கையாளும் [[உறுதிப்பாட்டியல்]] எனப்படும் மெய்யியல் பிரிவு. இது உலகின் இயல்பை அறிந்துகொள்வதற்கான ஒரு துறையாகக் கருதப்பட்டதுடன், [[மீவியற்பியல்]], இயற்கை அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கியும் இருந்தது. தற்கால மெய்யியல், பொதுவாக, மீவியற்பியல், [[அறிவாய்வியல்]], நெறிமுறை, [[அழகியல்]] என்னும் பிரிவுகளாக வகுக்கப்படுகின்றது. ஏரணம் சில வேளைகளில், மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவாகவும், சில வேளைகளில் ஒரு தனியான அறிவியலாகவும், வேறு சில சமயங்களில் மெய்யியலின் பல்வேறு கிளைகளிலும் பயன்படும் ஒரு மெய்யியல் முறையாகவும் விளங்குகிறது.
 
[[பகுப்பு:மேற்குலக மெய்யியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மேற்குலக_மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது