"மேற்குலக மெய்யியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,795 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==மேற்குலக மெய்யியலின் துணைத் துறைகள்==
மேற்குலக மெய்யியலாளர்கள், பல பிரிவுகளாக அல்லது சிந்தனைக் குழுக்களாகப் பிரிந்து இருப்பதைக் காணலாம். மெய்யியல் துறையின் வெவ்வேறு பகுதிகள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதனாலும், கருத்தியல் அடிப்படையிலான வேறுபாடுகளினாலும் இப்பிரிவுகள் உருவாகின்றன. பழங்காலத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியது, [[ஏரணம்]], [[நெறிமுறைஅறவியல்]], இயற்பியல் என்பவற்றைக் கையாளும் [[உறுதிப்பாட்டியல்]] (அல்லது "நடுநிலைக் கோட்பாடு") எனப்படும் மெய்யியல் பிரிவு. இது உலகின் இயல்பை அறிந்துகொள்வதற்கான ஒரு துறையாகக் கருதப்பட்டதுடன், [[மீவியற்பியல்]], இயற்கை அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கியும் இருந்தது. தற்கால மெய்யியல், பொதுவாக, மீவியற்பியல் (அல்லது "நுண்பொருளியல்"), [[அறிவாய்வியல்]], அறவியல், [[அழகியல்]] என்னும் பிரிவுகளாக வகுக்கப்படுகின்றது<ref>நாராயணன், க., ''மேலைநாட்டு மெய்ப்பொருள்'', மாரி பதிப்பகம், புதுச்சேரி, 2003. பக். 21</ref>. ஏரணம் சில வேளைகளில், மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவாகவும், சில வேளைகளில் ஒரு தனியான அறிவியலாகவும், வேறு சில சமயங்களில் மெய்யியலின் பல்வேறு கிளைகளிலும் பயன்படும் ஒரு மெய்யியல் முறையாகவும் விளங்குகிறது.
 
தற்காலத்தில், இவ்வாறான முக்கிய பிரிவுகளுள் எண்ணற்ற துணைப் பிரிவுகளும் உள்ளன. பரந்த அளவில் [[பகுத்தாய்வு மெய்யியல்]], [[கண்டம்சார் மெய்யியல்]] போன்ற பிரிவுகளும் அவற்றுக்குள் துணைப்பிரிவுகளும் உள்ளன.
 
குறிப்பிட்ட துணைப்பிரிவுகளின் மீதான ஆர்வம் பல்வேறு கால கட்டங்களில் குறைந்தும் கூடியும் வந்துள்ளது. சில வேளைகளில் சில துணைப்பிரிவுகள் மெய்யியலாளரிடையே பெருமளவு ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைவதுடன், மெய்யியலின் முக்கியமான பிரிவுகளைப் போலவே இவை தொடர்பிலும் பெருமளவு நூல்கள் வெளியாவதையும் காணலாம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மீவியற்பியலின் ஒரு துணைப்பிரிவான [[மனம்சார் மெய்யியல்]], பகுத்தாய்வு மெய்யியலுள் பெருமளவு கவனத்தை ஈர்த்திருப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1430953" இருந்து மீள்விக்கப்பட்டது