"நீல்சு போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,484 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
1913 இல் தத்துவம் சாந்த இதழ் ஒன்றில் இவருடைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ரூதர்போர்டு கண்டறிந்த அணுவின் உட்கரு பற்றிய கருத்துகளின் அடிப்படையில் இவர் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டார். பிளாங்கின் துகள் தொகுதி எந்திரவியல் பற்றிய கருத்துகளுக்கு இவருடைய ஆய்வுகள் வழிகாட்டியதோடு மேலும் சில விளக்கங்களையும் அளித்தன. கருத்தியல் இயற்பியலில் இவருடைய கருத்துகள் இன்றளவும் சிறப்பன இடத்தைப் பெற்றுள்ளன. இவருடைய ஆய்வுகள் அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தன. (பின்னாளில் 1925 இல் ஹெய்சன்பர்க் என்பவரின் கருத்துகளும் சேர்ந்தபின் ) தனிமங்களின் இயற்பியல், வேதியல் பண்புகளுக்கு இந்தக் கருத்துகள் தாம் தெளிவை அளித்தன.
 
=== குடும்பம் ===
1912 இல் நீல்சு போர், அவருடைய மனைவி மார்கரெட் நார்லண்டு (Margrethe Nørlund) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவ்விணையருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். இரு குழந்தைகள் இளமையிலேயே இறந்தனர். மற்றவர்களில் பலரும் நல்வாழ்க்கையைப் பெற்றனர். பல துறைகளில் சிரந்துசிறந்து விளங்கினர். அவர்களில் [[ஆகெ நீல்சு போர்]] [[1975]] இல் தந்தையைப் போலவே நோபல் பரிசு பெற்றார்.
 
== பணிகள் ==
1913 இல் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வுகள் பற்றிய சொற்பொழிவுகளை மேற்கொண்டார். இதே போன்ற பணியை 1914- 16 இல் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்திலும் மேற்கொண்டார். 1926 இல் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் கருத்தியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1920 இலிருந்து இவருடைய இறுதிக்காலம் 1962 வரை அப்பல்கலைக்கழகத்தில் இவருக்காகவே நிறுவப்பட்ட கருத்தியல் இயற்பியல் நிறுவனத்தில் (Institute for Theoretical physics) தலைவராக இருந்து செயல்பட்டார்.
 
அணு அமைப்பு பற்ரிய இவருடைய எடுகோள்கள் 1922 இல் இவருக்கு உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசியைப் பெற்ருத் தந்தன. 1930 இலிருந்து இவருடைய ஆய்வுகள் அணுவின் உட்கரு அமைப்பு பற்ரியும், அவற்றில் ஏற்படும் பொருள் நிலைமாற்றங்கள் மற்றும் சிதைவுகள் பற்றிஒயே அமைந்தன. அணுவின் உட்கருப் பகுதியின் மிகச் சிறிய அமைப்பில் ஏற்படும் உட்கரு விசை பற்றியும், அதனால் ஏற்படு விளைவுகள் பற்றியும் இவர் பலவிதமான விளக்கங்களை தரமான வகையில் அளித்தார்.
 
திர்வத் துளி மாதிரி அமைப்பு இந்த வகை அணுவின் உட்கருவிற்கு ஒரு முழு வடிவத்தைத் தந்ஹ்டது. இந்தத் திரத் துளிக் கோள்கை அணுவின் உட்கருப் பிளவு ஏற்படும் தனமையினைப் புரிந்த்கொள்ள உதவியது. 1939 இல் ஹான், ஸ்ட்ராமேன் என்ற இருவர் யுரேனியத்தில் ஏற்படும் பிளவைக் கண்டறிந்த போது பிரிஷ், மெயிட்னர் போன்றவர்களின் கருத்தியல் ஆய்வுகளுக்கும் நீல்ஸ்போரின் கருத்துகள் மிகவும் உதவியாயிருந்தன.
 
நீல்சுபோரின் ஆய்வுகள் கிட்டதட்ட 115 புத்தகங்களாக வெளியிடப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது என்மார்க் நாசிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனால் நீல்சு போர் சுவீடன் நாட்டிற்குத் தப்பியோடினார். அங்கு இரண்டு ஆண்டுகள் அணு ஆற்றல் திட்டம் பற்றிய ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அணு இயற்பியலை அமைதி வழியில் பயன்படுத்துவது, அணு ஆயுதங்களினால் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார். நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திறந்த மனதுடன் செயல் பட்டார். 1950 இல் இவருடைய இக்கருத்துகள் "ஐக்கிய நாடுகளுக்கு ஒரு திறந்த கடிதம்" (Open letter to the United Nations) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.
 
இவருடைய இறுதிக் காலத்தில் மூலக்கூறு உயிரியலில் இவருடைய கவனம் திரும்பியது. இது குறித்த இவருடைய கருத்துகள் இவருடைய மறைவுக்குப் பிறகு "Light and Life Revisited " என்ற நூலாக வெளியிடப்பட்டது.
 
== சிறப்புகள் ==
 
== இவற்றையும் பார்க்க ==
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1431384" இருந்து மீள்விக்கப்பட்டது