"ஜானகி இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

127 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், [[1936]] ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாடு|தமிழ்நாட்டில் உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] இடம் பெயர்ந்தார். <ref name = “a”> எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4</ref>
 
அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனுக்கு]] தம்பியான இராசகோபலய்யர் ஆவார். சிறிதுகாலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார். 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த [[மெட்ராஸ் மெயில்]] <ref name = “b”"b"> காண்டீபன்; சினிமா டைரி 1962; சுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ், மைலாப்பூர், சென்னை; பக்.30 </ref> திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் [[சென்னை|சென்னைக்குக்]] குடிபெயர்ந்தார். <ref name = “a”> எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4</ref>
 
== திரை வாழ்க்கை ==
 
== நடனப் பள்ளியில் ==
அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய [[கே. சுப்பிரமணியம்]] நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். ஜானகி இக்குழுவில் 1942ஆம் ஆண்டில் இணைந்தார். இக்குழுவில் கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான [[எஸ். டி. சுப்புலெட்சுமி]]க்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். [[வள்ளி திருமணம்]] நாடகத்தில் ஜான்கி [[முருகன்|முருகனாகவும்]] சுப்புலெட்சுமி [[வள்ளி|வள்ளியாகவும்]] நடித்தனர். <ref name = “c”"c"> எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.5</ref>
 
== மணவாழ்க்கை==
=== இரண்டாவது திருமணம் ===
[[படிமம்:MGR and Janaki 1.jpg|thumbnail|ம. கோ. இராவும் ஜானகியும்]]
ஜானகி '''இராஜ முக்தி''' படத்தில் கதைத் தலைவியாக நடித்தபொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக எம். ஜி. ஆர். என்னும் ம. கோ. இராமசந்திரன் நடித்தார். ம. கோ. இரா.வுக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், ம. கோ. இரா.வுக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. <ref name ="z" >http://cinema.maalaimalar.com/2009/11/10110341/mgr.html</ref>அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் ஜானகியும் ம. கோ. இரா.வும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரை தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். <ref name = “d”"d"> எம்.ஜி.ஆர்.; நான் ஏன் பிறந்தேன்; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர் </ref> இத்திருமணத்தை ம. கோ. இரா.வுக்கு அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம்திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து [[1962]] [[பிப்ரவரி 25]] ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் [[சூன் 14]]ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டைலிருந்து கிளம்பி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர். <ref name = “a”"c"> எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.45</ref>
 
== குழந்தைகள் ==
ஜானகிக்கு அப்பு என்கிற சுரேந்திரனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. எனவே தன் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா, கீதா, சுதா. ஜானு, தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார். <ref name = “a”"c"> எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.45</ref>
== அரசியல் வாழ்க்கை ==
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
[[பகுப்பு:1996 இறப்புகள்]]
 
{{இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை}}
2,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1432006" இருந்து மீள்விக்கப்பட்டது