ராதிகா சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
178.152.33.139 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1407428 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 16:
'''இராதிகா''', (பிறப்பு - [[செப்டம்பர் 21]], [[1963]], [[இலங்கை]].), தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.
 
==பிறப்பு==
==குடும்பம்==
பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவுக்கும்] அவரின் மூன்றாவது மனைவி கீதாவிற்கும் 1963 செப்டம்பர் 21 ஆம் நாள் ராதிகா மகளாகப் பிறந்தார். திரைப்பட நடிகை [[நிரோஷா|நிரோஷாவும்]] திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்|ராதா மோகனும்]] இவரது உடன்பிறந்தவர்கள் ஆவர்.
இவருடைய குடும்பம் பாராம்பரிய திரைப்படப் பின்னணியை சேர்ந்தது. இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா]] ஆவார். இவரின் அண்ணன் [[ராதாரவி]] மற்றும் தங்கை [[நிரோஷா]] ஆகியோர் பிரபல நடிகர்- நடிகைகள் ஆவார்கள். இவரின் முதல் திருமணம் மலையாள நடிகர், இயக்குனர் ஆன [[பிரதாப் போத்தன்]] என்பவருடன் நடந்தது, அது விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவது திருமணம் பிரித்தானிய நாட்டவரான ரிச்சர்ட் ஹார்டி என்பவருடன் நடந்து அவர்களுக்கு ரய்னே ஹார்டி என்ற பெண் குழந்தை பிறந்தது. இவருடைய 3வது கணவர் [[சரத்குமார்]], இவர்களுக்கு இராகுல் சரத்குமார் என்ற மகன் உள்ளார்.
 
== காதல் வாழ்க்கை ==
=== முதற் காதல் ===
ராதிகா [[1978]] ஆம் ஆண்டில் கிழக்கே போகும் ரெயில் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படத்தின் கதாநாயகியான ராதிகாவுக்கு இணையான கதாநாயகனாக சுதாகர் என்னும் நடிகர் நடித்தார். அவர்கள் இருவருக்கும் முதற்படமே வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் தொடர்ந்து பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளிலேயே சுதாகர் திரையுலகில் தன் கதாநாயகத் தகுதியை இழந்தார். இதனால் ராதிகாவுக்கும் சுதாகருக்கும் இடையில் இருந்த காதல் முறிந்தது.
 
=== இரண்டாவது காதல் ===
ராதிகா [[1981]] ஆம் ஆண்டில் [[பாக்யராஜ்|பாக்யராஜூடன்]] இணைந்து [[இன்று போய் நாளை வா]] என்னும் படத்தில் நடித்தார். அப்பொழுது அவர்களுக்கு இடையில் அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து [[பாமா ருக்மணி]], [[பொய் சாட்சி]], [[தாவணிக் கனவுகள்]] உள்ளிட்ட சில படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். அந்நெருக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இந்நிலையில் பாக்யராஜின் முதல்மனைவியான் பிரவீணா திடீரென்று மரணம் அடைந்தார். அப்பொழுது ராதிகாவும் பாக்ய ராஜூம் திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்பட்டது. ஆனால், [[பூர்ணிமா ஜெயராம்]] என்னும் நடிகையை பாக்யராஜ் மணந்ததால் அக்காதல் முறிந்தது.
 
=== மூன்றாவது காதல் ===
ராதிகாவிற்கு மூன்றாவது காதல் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] மீது ஏற்பட்டது. ராதிகாவும் விஜய காந்த்தும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். சில ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்ய எண்ணியபொழுது, இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லை என விஜய காந்திடம் சோதிடர்கள் கூறினார். இதனால் அக்காதல் முறிந்தது.
 
== மணவாழ்க்கை==
=== முதல் திருமணம் ===
[[படிமம்:Prathap Pothen-Radhika.jpg|thumbnail|ராதிகா பிரதாப் போத்தன் தம் திருமண நாளில் தம் நண்பர்கள் பி.சி.ஶ்ரீராம், சிவாஜி சந்தானம், சுபாஷ் ஆகியோருடன்]]
ராதிகாவும் மலையாள நடிகரும் இயக்குநருமான [[பிரதாப் போத்தன்|பிரதாப் போத்தனும்]] இணைந்து நடித்தனர். அப்பொழுது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தம் நண்பர்கள் துணையோடு திருமணம் செய்துகொண்டனர். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.
 
=== இரண்டாவது திருமணம் ===
ராதிகா தனது தொழில் தொடர்பாக அடிக்கடி இங்கிலாந்திக்குச் சென்று வந்தார். அப்பொழுது அந்நாட்டினரான ரிச்சர்ட் ஹார்டி என்பவரைச் சந்தித்துக் காதலித்தார். அக்காதல் திருமணத்தில் முடிந்தது. அதன் விளைவாக ராதிகா, ரய்னே ஹார்டி என்னும் பெண்குழந்தையை ஈன்றார். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.
 
=== மூன்றாவது திருமணம் ===
[[படிமம்:Radhika-Sarathkumar.jpg|thumbnail|ராதிகா தன் மூன்றாவது கணவர் சரத்குமாருடன்]]
ராதிகா தனது ராடன் நிறுவனத்தின் மூலம் கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் தயாரித்தார். அந்நிகழ்ச்சியை இரு பெண் குழந்தைகளின் தந்தையும் நடிகருமான [[சரத்குமார்]] திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராதிகவிற்கும் சரத்குமாருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் விளைவாக ராதிகா [[2004]] ஆம் ஆண்டில் இராகுல் சரத்குமார் என்னும் ஆண் குழந்தையை ஈன்றார்.
 
== இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராதிகா_சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது