மாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 47:
 
வரலாற்றுச் சுவட்டில் பல இராச்சியங்களின் தலைநகராக மாஸ்கோ விளங்கியுள்ளது. [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்தில்]] மாஸ்கோ குறுநில மன்னராட்சிக்கும் தொடர்ந்து சார் மன்னர்களாட்சிக்கும் பின்னர் எழுந்த [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்திற்கும்]] தலைநகரமாக விளங்கியது. மாஸ்கோவில்தான் நடுக்காலத்தில் கோட்டையாகவும் தற்போதைய அரசுத்தலைவர் மாளிகையாகவும் உள்ள [[கிரெம்லின்]] உள்ளது. கிரெம்லின் நகரில் உள்ள பல [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக உள்ளது. உருசிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், டூமா மற்றும் கூட்டாட்சி அவை, இங்குதான் கூடுகின்றன.
 
நகரின் போக்குவரத்துத் தேவைகளுக்காக நான்கு பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் ஒன்பது தொடர்வண்டி முனையங்களும் உலகின் மிகுந்த ஆழத்தில் செல்லும் புவியடி விரைவுத் தொடருந்து பிணையமும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாஸ்கோவின் மெட்ரோ தோக்கியோ, சியோல் மெட்ரோக்களை அடுத்து மிக் கூடுதலான பயணிகள் பயன்படுத்தும் சேவையாக உள்ளது. இந்தப் பிணையத்தின் 188 நிலையங்களும் அவற்றின் கட்டிட வடிவமைப்பிற்காக நகரத்தின் முதன்மைக் குறியீடுகளாக விளங்குகின்றன.
 
காலவோட்டத்தில் மாஸ்கோவிற்கு, அதன் அளவையும் அதிகார மையத்தையும் கொண்டு, பல பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன: மூன்றாம் உரோமை ({{lang|ru|Третий Рим}}), வையிட்ஸ்டோன் ஒன்று ({{lang|ru|Белокаменная}}), முதல் அரியாசனம் ({{lang|ru|Первопрестольная}}), நாற்பது நாற்பதுகள் ({{lang|ru|Сорок Сороков}}).
 
== சோவியத் காலத்தில் ==
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது