3
தொகுப்புகள்
சி (added Category:கணினி அறிவியல் முன்னோடிகள் using HotCat) |
No edit summary |
||
=== இளமை ===
பில்கேட்ஸ் தனது பள்ளி படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு ப்ரோகிராமிங்கில் ஆர்வமிருந்ததால், தனது 13ம் வயதிலெயே ப்ரோகிராம் எழுத தொடங்கினார். பிறகு [[1973]]ல் [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹாவார்டு பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹர்வர்ட் பல்கலை கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை [[1975]]ல் துவங்கினார். கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது இதனால் அவர்கள் கணிப்பொறிக்கு தேவையான மென்பொருள்களை எழுத துவங்கினர். அவருடைய இந்த தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிக பெரிய வெற்றியை தேடி தரலானது. இவருடைய தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.
== பிற துறைகள் ==
=== எழுத்து / திரைப்படம் ===
இதுவரை பில் கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியான "தி ரோடு அஹெட்" என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும் , பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.அதில் தனி நபர் கணினி பயன்பாட்டில் ஏற்பட்ட புரட்சியை பற்றியும் உலகத்தில் அதிவேக தகவல் தொடர்பின் வரவு எதிர்காலத்தை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது . 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட் " என்ற நூலில் வியாபாரமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் , தொழில்நுட்ப கட்டமைப்புகளும் தகவல் வளையங்களும் எப்படி போட்டி நிறைந்த வியாபார உலகில் கைகொடுக்கும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
2010 இல் எடுக்கப்பட்ட "வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன் " , பிபிசி தயாரித்த ஆவணப்படமான "தி வர்ச்சுவல் ரெவலுஷன்" உட்பட பல ஆவணப்படங்களில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார்.
1999 ஆம் வருடம் வெளியான "பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி" என்ற திரைப்படத்தில் "ஆப்பிள்" மற்றும் "மைக்ரோசாப்ட்" நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் "அண்டோனி மைகேல் ஹால் " என்ற நடிகர் நடித்தார்.
==மேற்கோள்கள்==
|
தொகுப்புகள்