"பண்டைக் கிரேக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,918 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
டைடேன் எனும் பராக்கிரமசாலியின் மகளான இவள் சியுசு தெய்வத்தின் மனைவியாவாள்.எரசு இவளது மகனாவான்.இவள் யுத்தத்தின் அதிபதியாக கருதப்படுகிறாள்.அத்தோடு பொறாமை மிக்க தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.
 
=== பார்த்தீனன் ஆலயம் ===
இவ்வாலயம் அதீனா தெய்வத்திற்காக கட்டப்பட்டதாகும்..இது 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வத்தின் பெயர் ஆதீனா ஆகும். இந்த தெய்வத்திற்கு நன்றி கூறும் விதமாகவே இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இது, ஏதென்ஸ் நகரின் அக்ரோபோலிஸில் அமைந்துள்ளது. பார்த்தினன் கட்டடம், கிரேக்க நாட்டின் மாபெரும் அரசியல்வாதி பெர்க்கிளிஸின் காலமான கி.மு. 438 இல் கட்டப்பட்டது ஆகும்.
 
=== அக்ரோபோலிஸ் ===
'''அக்ரோபோலிஸ்''' என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. சமயம் தொடர்பான [[கட்டிடம்|கட்டிடங்களும்]], குடிமக்களுக்கான பொதுக் கட்டிடங்களும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. அக்காலத்து [[ஏதென்ஸ்|ஏதென்சில்]] இருந்த அக்ரோபோலிஸ் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு ஆகும்.
 
அக்ரோபோலிஸ் (Acropolis) என்னும் சொல், ''acron'' = விளிம்பு, ''polis'' = நகரமென்னும் இரு கிரேக்கச் சொற்களின் இணைவினால் உருவானது. நேரடியாக மொழி பெயர்க்கும்போது, ''நகரத்தின் விளிம்பு'' என்ற பொருள் தருகின்றது.
 
[[படிமம்:Acropolis from south-west.jpg |thumb|left|275px|தென்மேற்கிலிருந்து ஏதென்சிலுள்ள அக்ரோபோலிசின் இன்னொரு தோற்றம்]]
 
 
அக்ரோபோலிஸ்கள் உயர்ந்த நிலப்பகுதிகளிலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன. பொதுவாக செங்குத்தான பக்கங்களைக் கொண்ட குன்றுகளே தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய இடங்கள் நகரத்தின் பாதுகாப்புக்கு வாய்ப்பான இடங்களாகும். பண்டைய கிரேக்க நகரங்களான ஏதென்ஸ், [[ஆர்கோஸ்]] (Argos), [[தேபிஸ்]] (Thebes), [[கொறிந்த்]] (Corinth) என்பவற்றில் அக்ரோபோலிஸ்கள் இருந்தன. இது கிரேக்க நகரங்கள் தொடர்பிலேயே உருவானபோதும், பிற்காலத்தில் பல இடங்களிலும் உருவான நகர மையங்களும் அக்ரோபோலிஸ் என்று அழைக்கப்பட்டன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1433750" இருந்து மீள்விக்கப்பட்டது