வெண்கலக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 101 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''வெண்கலக் காலம்''' (''Bronze Age'') மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். இக்காலத்தில் முன்னரிலும் மேம்பட்ட உலோகவேலைத் தொழில்நுட்பம், [[செப்பு]], [[தகரம்]] என்பவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்து உருக்குதல், [[வெண்கலம்]] ஆக்குவதற்காக அவ்விரு [[உலோகம்|உலோகங்களையும்]] கலத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான [[முக்கால முறை]]யில் இரண்டாவது காலகட்டம் ஆகும். இம் முக்காலங்களில் முதலாவது [[கற்காலம்|கற்காலமும்]], மூன்றாவது [[இரும்புக் காலம்|இரும்புக் காலமும்]] ஆகும். இந்த முறையின் கீழ், சில பகுதிகளில், வெண்கலக் காலம், [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தை]] அடுத்து வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில்பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது.
 
== வரலாறு ==
தொல்லியலின் முக்கால முறைமையின் படி கற்காலத்தை அடுத்து வெண்காலக்காலம் வருகிறது. தொன்மவியல் கதைகளின் படி இதற்கு முன் தங்கக்காலமும் வெள்ளிக்காலமும் இருப்பதாகக் கருதப்பட்டாலும் அவை வரலாற்று ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் [[கற்காலம்]], வெண்கலக் காலம், [[இரும்புக்காலம்]] போன்றவை வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வெண்கலக் காலம் புவியின் ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கிய காலம் வேறுபடுகிறது. தகரக்கனிமத்தில் இருந்து [[தகர்ம்|தகரத்தை]] பிரித்தெடுத்து அதை செப்புக்கூழோடு சேர்ப்பர்.
 
=== சிந்து சமவெளி ===
[[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தில்]] வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்புத்தி மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அரப்பன் மக்கள் உலோகவியலில் [[செம்பு]], [[வெண்கலம்]], [[ஈயம்]] மற்றும் [[தகரம்]] போன்றவற்றை பற்றிய புதிய நுட்பங்களை உருவாக்கினர். இப்பகுதியில் வெண்கலக் காலம் முடிந்தவுடம் [[இரும்புக் காலம்]] எழுந்தது. வெண்கல-இரும்புக் கால குழப்ப காலம் கி.மு. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இருந்ததாக கணிக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/வெண்கலக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது