வெண்கலக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
பண்டைய எகிப்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்தி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. எகிப்தின் முந்தைய வெண்கல அரசுகள் கி.மு. மூன்றாம் ஆயிராவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டில் முடிவடைகிறது. மத்திய வெண்கல அரசுகள் கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் முடிவடைகிறது. பிந்தைய வெண்கல அரசுகள் கி.மு. கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் தொடங்கி கி.மு. முதலாம் ஆயிராவாண்டில் முடிவடைகிறது. இந்த பிந்தைய வெண்கல அரசுகளின் இறுதிக்காலத்திலேயே வெண்கல-இரும்புக் கால குழப்ப காலமும் எகிப்தில் தொடங்கிவிட்டது.
 
=== பண்டைய சீனமும் கொரியாவும் ===
பண்டைய சீனத்தில் மாசியயோ சமூக (கி.மு. முப்பத்தி ஒன்றாம் நூற்றாண்டு முதல் இருபத்தி ஏழாம் நூற்றாண்டு வரை) வெண்கலக் காலம் அறிமுகமானது. எனினும் கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டின் ஆரம்பம் தொடங்கி கி.மு. எட்டாம் நூற்றாண்டுவரையில் வண்கலத்தின் பயன்பாடு இப்பகுதியில் பரவலாக காணப்பட்டது. கொரியா தீபகற்பத்தில் வெண்கலக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டு ஆரம்பமானது.
 
=== பண்டைய பிரிட்டன் ===
பண்டைய பிரிட்டனில் முந்தைய வெண்கலக் காலம் கி. மு. இருபத்தி ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி கி. மு. பதினைந்தாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது. பிரிட்டனில் வெண்கலத்தில் தோற்ற காலம் குறித்து தெளிவான வரையறை இல்லாவிட்டாலும் அதன் பிறகு வந்த மத்திய வெண்கலக் காலமும் புதிய வெண்கலக் காலமும் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன
 
;முந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 2500-1500)
 
கி. மு. 2500 - 2000: மவுன்ட் பிளசன்ட் பகுதி, முந்தைய பீக்கர் சமூகம் (செம்பும் தகரமும்)
கி. மு. 2100-1900: பிந்தைய பீக்கர் சமூகம், கத்திகளும் வேல்களும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்
கி. மு. 1900-1500: பெட் பிரான்வென் காலம் (செம்பும் தகரமும்)
;மத்திய வெண்கலக் காலம் (கி. மு. 1500-1000)
கி. மு. 1500-1300: ஆக்டன் பார்கு பகுதி, பிணைக்கப்பட்ட ஈட்டிகள் (செம்பும் தகரமும் அல்லது செம்பும் ஈயமும்)
கி. மு. 1300-1200: நைட்டன் ஹெத் காலம்
கி. மு. 1200-1000: முந்தைய அர்ன்பீல்ட் பகுதி
;பிந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 1000-700)
கி. மு. 1000-900 BC: பிந்தைய அர்ன்பீல்ட்
கி. மு. 800-700 BC: எவர்ட் பார்க் பகுதி, வாள்கள் உருவாக்கம் பெற்ற காலம்
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/வெண்கலக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது