மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
== வரலாறு ==
மிகப் பழங்காலத்திலேயே, அணுவின் துகள்களைப் பற்றி அறியத் தொடங்கிய 19 ஆம் நூறாண்டுக்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே, சுமார் கி.மு. 600 காலப்பகுதியில் [[தாலஸ்|தாலசு]] என்னும் [[கிரேக்கம்|கிரேக்க]] அறிஞர் மின்மம் பற்றிய சில அரிய கண்டுபிடிப்புகளை எழுதியுள்ளார். திண்மமாய் மாறிய, மஞ்சள் நிறத்தில் காணப்படும், மரப்பிசினாகிய [[அம்பர்]] என்னும் பொருளை ஒரு துணியில் தேய்த்தால், அது சிறு சிறு செத்தைகள், முடி போன்றவற்றை ஈர்ப்பதை அறிந்திருந்தனர். கி.மு.300 காலப்பகுதியில் வாழ்ந்த [[பிளாட்டோ]] என்பாரும், அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி எழுதியுள்ளார். பிற்காலத்தில், கி.பி. 1600களில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசி [[எலிசபெத்-1]] அவர்களின் மருத்துவராகிய [[வில்லியம் கில்பர்ட்]] என்பாரும் அம்பர் மட்டுமல்லாமல், வைரம், கண்ணாடி, மெழுகு, கந்தகக் கட்டி முதலியனவும் அதே பண்பு கொண்டிருப்பதை அறிந்து எழுதினர். [[இலத்தீன் மொழி]]யில் அம்பருக்கு ''எலெக்ட்ரம்'' என்று பெயர், இதன் அடிப்படையிலேயே மின்மப் பண்பு காட்டும் பொருட்களுக்கு மேற்குலக மொழிகளில் ''எலெக்ட்ரிக்ஃசு'' (electrics) என்றும், அதன் அடிப்படையில் சர் தாமசு பிரௌன் (Sir Thomas Browne), ''மின்சாரம்'' என்பதற்கு ''எலெக்ட்ரிசிட்டி'' (electricity) என்னும் சொற்களும் ஆக்கினர். பின்னர் 1729 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரான்சின் டு ஃவே (Du Fay) என்பார் மின்மங்கள் ஓட்டத்தில் ''இருவகை'' இருப்பதாகக் கண்டார். 1785 ஆம் ஆண்டு [[பிரான்சு|பிரான்சின்]] [[கூலாம்|சார்லசு டெ கூலாம்]] என்பபர் மின்மங்களுக்கு இடையே நிலவும் விசைகள் பற்றிய, துல்லியமான தொடர்பாடுகளை நிறுவினார். மின்மங்களுக்கு இடையே உள்ள மின்விசையை அளந்து ஓர் அடைப்படையான சமன்பாட்டை நிறுவினார். இதற்கு [[கூலாம் விதி]] என்று பெயர்.
 
== ஓரின மின்மங்கள் ஒன்றையொன்று விரட்டும். வேரின மின்மங்கள் ஒன்றையொன்று கவரும் - சோதனையியல் சரிபார்ப்பு : ==
பட்டு இழையால் தொங்கவிடப்பட்ட மின்னூட்டப்பட்ட கண்ணாடித் தகடு ஒன்று கிடைத்தளத்தில் அலைவுறுகிறது. தற்போது அதன் முனைக்கருகில் மற்றொரு மின்மம் பெற்ற கண்ணாடித்தண்டு கொண்டு வரப்பட்டால் , இரு முனைகளும் ஒன்றையொன்று விரட்டுவதைக் காணலாம். இருந்த போதிலும் மின்னூட்டப்பட்ட எபொனைட் தண்டானது, தொங்கவிடப்பட்ட கண்ணாடித் தண்டின் முனைக்கருகில் கொண்டு வரப்பட்டால் , இரு தண்டுகளும் ஒன்றையொன்று கவர்கின்றன. இச்சோதனை மூலம் ஓரின மின்மங்கள் ஒன்றையொன்று விரட்டும் , வேரின மின்மங்கள் ஒன்றையொன்று கவரும் எனத் தெரிய வருகிறது.
 
== மின்மங்களின் அடிப்படைப் பண்புகள் ==
வரி 22 ⟶ 25:
== கூலும் விதி ==
கூலும் விதியின்படி, இரு புள்ளி மின்மங்களுக்கு இடையேயான கவர்ச்சி விசை அல்லது விரட்டு விசையானது , மின்மங்களின் பெருக்குத்தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கு இடையெ உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் அமையும். மின்மங்களை இணைக்கும் கோட்டின் வழியே விசையின் திசை அமையும்.
 
== மின்மங்களின் பயன்பாடுகள் ==
மின்மம் பெற்ற பொருட்களுக்கிடையே தோன்றும் , கவரும் மற்றும் விரட்டும் பண்புகள் , நிலை மின்னியல் முறையில் வண்ணம் தெளித்தல் , துகள் பூச்சு , புகைக் கூண்டுகளில் பறக்கும் சாம்பலை சேகரித்தல் , மைப்பீச்சு அச்சுப்பொறி , அச்சுப் பகர்ப்பு நகல் பொறி போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.
 
[[பகுப்பு:மின்னியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது