ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 95 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சிNo edit summary |
||
வரிசை 29:
}}
'''ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்''' (13 ஜூன் 1831 – 5 நவம்பர் 1879) [[ஸ்காட்லாந்து|ஸ்காட்டியக்]] கணிதவியலாளரும், [[கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலாளரும்]] ஆவார். இவரது முக்கியமான சாதனை [[மின்காந்தவியல் கோட்பாடு]] ஆகும். [[மின்னியல்]], [[காந்தவியல்]] மற்றும் [[ஒளியியல்]] சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், [[சோதனை]]கள், [[சமன்பாடு]]கள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார். [[மக்ஸ்வெல்லின் சமன்பாடுகள்]] என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், [[மின்சாரம்]], [[காந்தப்புலம்]], [[ஒளி]] அனைத்துமே ஒரே [[தோற்றப்பாடு|தோற்றப்பாட்டின்]] வெளிப்பாடுகளே என விளக்கின. இதனைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முன்னைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்கள் ஆயின. மின்காந்தவியலில் மக்ஸ்வெல்லின் பணி ''இயற்பியலில் இரண்டாவது பெரிய ஒன்றிணைப்பு'' எனப்படுகின்றது.
மின் மற்றும் காந்தப் புலங்கள் வெளியினூடாக அலை வடிவில் செல்கின்றன என்றும், அவற்றின் வேகம் ஒளிவேகத்துக்குச் சமமானது என்றும் அவர் விளக்கினார்.1864ல் தானெழுதிய ''மின்காந்தப் புலத்தின் இயங்கியல் கோட்பாடு'' என்பதன் மூலம், மின் மற்றும் காந்தவியல் தோற்றப்பாடுகளைப் போலவே ஒளியும் அதே ஊடகத்தில் ஒண்டாகும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படுவதே என முன் மொழிந்தார். ஒன்றிணைந்த மின்காந்தவியல் மாதிரியை உருவாக்குவதில் இவருடைய பணிகள் [[இயற்பியல்|இயற்பியலின்]] முக்கியமான முன்னேற்றங்களுள் ஒன்று எனக் கருதப்படுகின்றது.
|