சார்புக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
வரிசை 12:
 
'''சார்புக் கோட்பாடு''' [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|அல்பர்ட் ஐன்ஸ்டீனால்]] முன்வைக்கப்பட்ட பிரபலமான கோட்பாடாகும். E = mc<sup>2</sup> என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார்.
 
== சிறப்புச் சார்புக் கோட்பாடு ==
{{main|சிறப்புச் சார்புக் கோட்பாடு}}
 
[[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] (special theory of relativity) என்னும் கொள்கை [[ஆல்பர்ட் ஐன்ஸ்டின்|ஆல்பர்ட் ஐன்ஸ்டினால்]] 1905ல் வெளியிடப்பட்ட கருத்தாக்கமாகும். இது துகள்களின் இயக்கம் தொடர்பானது. இது எந்தவொரு இயக்கமும் சார்பானது என்றும், எதுவும் தீர்க்கமானதாக இருக்காது என்றும் ஒரு கருத்தை முன் வைத்தது. இதற்கு முன்னரே 1687 ஆம் ஆண்டில் சர். [[ஐசக் நியூட்டன்]] பொருட்களின் இயக்கங்கள் தொடர்பான [[நியூட்டனின் இயக்க விதிகள்|விதிகளை]] வெளியிட்டிருந்தார். இவ்விதிகள் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபட்ட இயக்கங்களுக்குப் பொருத்தமாக அமைந்தது.
 
=== சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் கருதுகோள்கள் ===
சிறப்புச் சார்புக் கோட்பாடு இரண்டு கருதுகோள்களைக் கொண்டுள்ளது.
# ஒளியின் வேகம் மாறாத் தன்மை- கவனிப்பவர்களுடைய சார்பு வேகம் எதுவாக இருப்பினும், அவர்கள் எல்லோருக்கும் ஒளியின் வேகம் ஒன்றே.
# எந்தவொரு சடத்துவக் குறியீட்டுச் சட்டத்திலும் இயற்பியல் விதிகள் ஒன்றே. சார்பு நிலையில் துகள் ஒன்றுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும், சோதனைச் சாலையில் நிலையாக இருக்கும் ஒருவருக்கும் இயற்பியல் விதிகள் ஒன்று என்பதே இதன் பொருள்.
 
== பொதுச் சார்புக் கோட்பாடு ==
{{main|பொதுச் சார்புக் கோட்பாடு}}
 
[[பொதுச் சார்புக் கோட்பாடு]] என்பது 1916ஆம் ஆண்டில் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால்]] வெளியிடப்பட்ட [[ஈர்ப்பு]]க்கான [[வடிவவியல்]] கோட்பாடு ஆகும். பொதுச் சார்பின் மையக் கருத்து [[வெளி]]யும் [[நேரம்|நேரமும்]] [[வெளிநேரம்]] எனப்படுவதன் இரண்டு அம்சங்கள் என்பதாகும். வெளிநேரம் அதில் இருக்கும் [[பொருள்]], [[ஆற்றல்]], [[உந்தம்]] என்பவற்றின் காரணமாக வளைந்து காணப்படுகிறது
 
== எடுத்துக்காட்டுகள் ==
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சார்புக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது