ரைட் சகோதரர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 85 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 27:
 
[[1904]], [[1905]] ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.
 
இதற்குத் தேவையான எந்திர திறன்களை அவர்கள் தங்களுடைய அச்சுக்கூடம், மிதிவண்டி, மோட்டார்கள், மற்ற இயந்திரங்கள் மூலம் பெற்றனர். பறக்கும் எந்திரம் போன்ற ஒரு நிலையற்ற வாகனத்தை பயிற்சி மூலம் கட்டுப்படுத்தி சமநிலையில் நிறுத்தலாம் என்ற நம்பிக்கையை தாங்கள் மதிவண்டியுடன் வேலை செய்யும்போது ஏற்பட்டது. 1900 முதல் 1903 வரை தங்களின் முதல் பறக்கும் விமானம் வரை, அவர்கள் பல மிதவை வானூர்திகளை சோதனை செய்தனர். அதன்மூலம் தங்களின் விமானிக்கான திறன்களையும் மேம்படுத்திக் கொண்டனர். அவர்களுடைய மிதிவண்டி கடையில் ஊழியரான சார்லி டெய்லர் என்பவரும் அவர்களுடைய முதல் வானூர்தியை அமைப்பதில் அவர்கள் அணியில் இணைந்து முக்கிய பங்குவகித்தார்.
 
மில்டன் ரைட் என்ற ஆங்கிலேய-டச்சுக்காரருக்கும் சுசான் கேத்ரின் என்ற ஜெர்மன்-ஸ்விஸ் பெண்மணிக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் வில்பர் 1867-இலும், ஓர்வில் 1871-இலும் பிறந்தனர். இவர்கள் திருமணமே செய்துகொள்ளவில்லை. தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு துரத்தப்பட்டார்.
அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். அதற்காக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது “எலிகாப்டர்“ பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர், பிறக அவர்களாக ஒன்றை அமைத்தனர். பறப்பதற்கு அந்த பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்கள் தங்கள் அனுபவம் பற்றி சுட்டிக்காட்டினர்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரைட்_சகோதரர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது