திருமூலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
'''திருமூலர்''' அல்லது '''திருமூல நாயனார்''' [[சேக்கிழார்]] சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 [[நாயன்மார்]]களுள் ஒருவரும், [[பதினெண் சித்தர்கள் பட்டியல்|பதினெண் சித்தர்களுள்]] ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை [[நம்பியாண்டார் நம்பி]]கள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் [[5ம் நூற்றாண்டு|ஐந்தாவது நூற்றாண்டு.]]<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=226}}</ref> இவர் அருளிச்செய்த நூல் [[திருமந்திரம்|திருமந்திரமாலை]]யாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது<ref>மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ், ஞாலம் அறியவே நந்தி (திருமூலர்)</ref>. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
==திருமூல சித்தர்==
திருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. இவர் திருமூலர் அல்ல. திருமூல சித்தர்.<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=212}}</ref> வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை.
 
{{cleanup}}
==வரலாறு==
திருக்கையிலாயத்தில் [[சிவபெருமான்|சிவபெருமானது]] திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் ([[அட்டமா சித்திகள்]]) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் [[அகத்தியர்|அகத்திய]] முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் [[திருக்கேதாரம்]], [[பசுபதிநேபாளம்]], அவிமுத்தம் ([[காசி]]), [[விந்தமலை]], [[திருப்பருப்பந்தம்]], [[திருக்காளத்தி]], [[திருவாலங்காடு]] ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் [[காஞ்சி]] நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1438761" இருந்து மீள்விக்கப்பட்டது