ஓலி ரோமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*
→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 39:
அரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683இல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698இல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே; 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ)
 
1700இல் ரோமர் டென்மார்க்கு-நோர்வேயில் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார்; முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக [[டைக்கோ பிரா]] எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன.
[[Image:Ole Rømer at work.jpg|thumb|left|200px|பணியில் ஓலெ ரோமர் ]]
ரோமர் முதலில் இயற்றப்பட்ட [[வெப்பநிலை]] ஒப்பளவுகளில் ஒன்றை வடிவமைத்தவரும் ஆவார். 1708இல் இவரைச் சந்தித்த [[தானியல் காபிரியல் பாரன்ஃகைட்|டேனியல் பாரன்ஃகைட்]] இவர் உருவாக்கியிருந்த ரோமர் வெப்பளவுமானியை மேம்படுத்தி தற்போது சில நாடுகளில் புழக்கத்தில் உள்ள [[பாரன்ஃகைட்]] வெப்ப ஒப்பளவை உருவாக்கினார்.
 
டென்மார்க்கின் பல நகரங்களிலும் பல கடற்வழி நடத்தல் பள்ளிகளை நிறுவினார். 1705இல் கோபனாவன் [[காவல்துறை]]யின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் தனது முதல் செயற்பாடாக காவல்துறையை முழுவதுமாக கலைத்தார்; காவல்துறையின் தன்னம்பிக்கை மிகவும் குன்றியிருந்ததாகக் கருதினார். கோபனாவனில் தெருவிளக்குகளை (எண்ணெய் விளக்குகள்) அறிமுகம் செய்தவரும் இவரே. பிச்சைக்காரர்கள், ஏழைகள், வேலையற்றோர், விலைமாதுக்களை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தார்.
 
கோபனாவனில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளை இயற்றினார்; நகரின் நீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புக்களை சீரமைத்தார். நகரின் தீயணைப்புத் துறைக்கு புதிய கருவிகள் கிடைக்கச் செய்தார். நகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடுதலில் முக்கியப் பங்காற்றினார்.
 
தமது 65ஆவது அகவையில் 1710இல் உயிரிழந்தார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஓலி_ரோமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது