"மாக்னா கார்ட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

688 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
1215ஆம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்ட ஜான் எதிரி நாடான [[பிரான்சு|பிரான்சிடம்]] நார்மண்டிப் பகுதியை இழந்ததுடன் ஆட்சியும் சீராக இல்லாததினால் பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் அரசருக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தனர்.அரசருக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பிடித்து வரப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால், ஜான் எதிர்பார்த்தது போல் கலகம் அடங்கவில்லை. முன்பைக்காட்டிலும் கூடுதல் பலம் பெற்றது. கலகக்காரர்கள் லண்டனைக் கைப்பற்றினர்.
 
பின்னர் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மகாசாசனம் என்று அழைக்கப்படும் மேக்னா கார்ட்டா உருவானது.சாசனம் உருவான பிறகும் ஜான் தொடர்ந்து அடக்குமுறையை ஏவிவிட்டுக்கொண்டுதான் இருந்தார்.ஜான் மன்னருக்கு எதிராக பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது.. ஜூன் 15, 1215 அன்று அரசு முத்திரை சாசனத்தில் பதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இதன்படி அரசரின் முடிவு தன்னிச்சையாக இராது;வெளிப்படையாக அரசரால் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றாது "சுதந்திர" மனிதர்களை தண்டிக்க இயலாது.அவர் மகாசபையின் அனுமதியைப்பெற்றே செயற்படமுடிந்தது.
 
மாக்னா கார்ட்டா பொதுமக்கள் தமது அரசரின் ஆட்சி அதிகாரங்களை குறைத்து தங்களின் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசரை வலியுறுத்தி ஏற்பட்ட முதல் சாசனமாகும்.இதன் முன்னோடியாகவும் உந்துதலாகவும் 1100ஆம் ஆண்டு ஹென்றி I தானாகவே வெளியிட்ட '''சுதந்திர சாசனம்''' அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439252" இருந்து மீள்விக்கப்பட்டது