"ஓலி ரோமர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10,301 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
(→‎வாழ்க்கை வரலாறு: *திருத்தம்*)
தமது 65ஆவது அகவையில் 1710இல் உயிரிழந்தார்.
==ஒளியின் வேகத்தை அளவிடல்==
[[நிலப்படவரைவியல்|நிலப்படவியலிலும்]] கடல்வழிகாட்டுதலிலும் [[நிலநிரைக்கோடு|நிலநிரைக்கோட்டை]] தீர்மானிப்பதில் செயல்முறைச் சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வுகாண நிலத்திலிருந்து தள்ளி உள்ள கப்பலில் இருந்து நிலநிரைக்கோட்டை தீர்மானிக்கும் வழிமுறையொன்றை கண்டுபிடிப்பவருக்கு எசுப்பானியாவின் மூன்றாம் பிலிப் பரிசுகள் அறிவித்தார். இதன் எதிர்வினையாக 1616-17இல் [[கலீலியோ கலிலி|கலீலியோ]] ஒரு கப்பலில் இருந்து நேரத்தையும் நிலநிரைக்கோட்டையும் அறிய [[வியாழன் (கோள்)|வியாழக்கோளின்]] துணைக்கோள்களின் ஒளிமறைப்புக்களைப் பயன்படுத்தும் முறையை நிறுவினார். இருப்பினும் துல்லியமான நேர அட்டவணைகள் 18வது நூற்றாண்டு வரை கணிக்கப்படாததாலும் கப்பல்களிலிருந்து வியாழனின் துணைக்கோள்களை கவனிப்பதில் சிக்கல்கள் நிலவியதாலும் இதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.
 
இருப்பினும் வியாழனின் துணைக்கோள்களை நேரம் தீர்மானிக்கப் பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது. 1671இல் பல மாதங்களாக ''யான் பிக்கார்டு''ம் ரோமரும் வியாழனின் [[ஐஓ (சந்திரன்)|ஐஓ சந்திரனின்]] 140 கிரகணங்களை கவனித்து பதிந்தனர். அதே காலகட்டத்தில் பாரிசில் [[கியோவன்னி டொமெனிகோ காசினி]] என்ற பிரெஞ்சு அறிவியலரும் இந்த கிரகணங்களை பதிந்து வந்துள்ளார். இருவரது நேரங்களையும் ஒப்பிட்டு பாரிசுக்கும் ரோமர் பணிபுரிந்த யுரானியன்போர்க்குக்கும் இடையேயான நிலநிரைக்கோட்டு இடைவெளி கணக்கிடப்பட்டது. 1666க்கும் 1668க்கும் இடையே காசினி வியாழக்கோள்களின் சந்திரன்களைக் கவனித்து தமது அளவீடுகளில் பிழைகள் நேர்வதைக் கண்டறிந்தார். இது ஒளிக்கு குறிப்பிட்ட வேகம் இருப்பதாலேயே இருக்க வேண்டும் என எண்ணினார். 1672இல் ரோமர் காசினியிடம் உதவியாளராக இணைந்து இவற்றைக் கவனிப்பதைத் தொடர்ந்தார். காசினியின் அறிதல்களுடன் தன்னுடைய கவனிப்புக்களையும் இணைத்து ஆய்ந்தார். புவி வியாழனின் அருகாமையில் செல்லும்போது ஐஓ துணைக்கோளின் கிரணங்களுக்கு இடையேயான நேரங்கள் புவி வியாழனிடமிருந்து தள்ளி இருக்கும் போது ஏற்படுவதைவிட குறைவாக இருந்தது.
 
இவற்றைக் கொண்டு காசினி அறிவியல் அகாதமியில் ஆகத்து 22, 1676இல் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டார்:
 
<blockquote>''இந்த நேர வேறுபாடுகள் ஒளி கோள்களிலிருந்து புவியை அடைவதற்கு சிலத்துளி நேரமெடுப்பதால்தான் நிகழ்கின்றன; ஒளிக்கு கோள் பாதையின் பாதி விட்டத்தைக் கடப்பதற்கு பத்து முதல் பதினோரு நிமிடங்கள் எடுப்பதாகத் தெரிகிறது''.<ref>{{Cite journal | first1 = Laurence | last1 = Bobis | first2 = James | last2 = Lequeux | title = Cassini, Rømer and the velocity of light | url = http://www.bibli.obspm.fr/Bobis%20and%20Lequeux.pdf | journal = J. Astron. Hist. Heritage | volume = 11 | issue = 2 | pages = 97–105 | year = 2008}}.</ref></blockquote>
[[Image:Illustration from 1676 article on Ole Rømer's measurement of the speed of light.jpg|thumb|200px|1676ஆம் ஆண்டு ரோமர் விரிவுரைத்த கட்டுரையில் உள்ள படம் ரோமர் ஐஓ துணைக்கோளின் சுற்றுப்பாதைகளின் நேரங்களை புவி வியாழனை நோக்கி நகரும்போதும் (F - G) புவி வியாழனிலிருந்து வெளியே நகரும்போதும் (L - K) ஒப்பிட்டார்.]]
 
இருப்பினும் தமது இந்த கருதுகோளை காசினி பின்னாளில் திரும்பப்பெற்றார்; ஆனால் ரோமர் இதனை மேலும் ஆராய எடுத்துக்கொண்டார். பிக்கார்டும் தாமும் முன்னரே 1671-77 காலகட்டத்தில் நிகழ்த்திய கவனித்தல்களுடன் ஒப்பிட்டு பிரான்சிய அறிவியல் அகாதமிக்கு தமது முடிவுகளைத் தெரியப்படுத்தினார்.
 
ரோமரின் தரவுகளைக் கொண்டு பலரும் ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டனர். இவர்களில் முதலாமவராக [[கிறித்தியான் ஐகன்சு]] விளங்கினார்; ரோமரின் தரவுகளையும் தமது கவனிப்புக்களையும் கொண்டு ஒளி வினாடிக்கு {{frac|16|2|3}} புவியின் விட்டத் தொலைவு செல்வதாக கணக்கிட்டார்.<ref>[[கிறித்தியான் ஐகன்சு|Huygens, Christian]] (8 January 1690) ''[http://www.gutenberg.org/catalog/world/readfile?fk_files=164378 Treatise on Light]''. Translated into English by Silvanus P. Thompson, [[குட்டன்பேர்க் திட்டம்]] etext, [http://www.gutenberg.org/catalog/world/readfile?fk_files=164378&pageno=11 p. 11]. Retrieved on 2007-04-29.</ref>
 
ஒளிக்கு அளவிடக்கூடிய வேகம் உள்ளது என்ற ரோமரின் கருதுகோள் 1727இல் [[ஜேம்ஸ் பிராட்லி]] தனது அளவீடுகள் மூலம் நிருபிக்கும்வரை அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 
1809இல் ஐஓ துணைக்கோளின் கவனிப்புக்களைக் கொண்டு, இம்முறை நூறாண்டுகளுக்கும் மேலான துல்லிய அளவீடுகளைக் கொண்டு, யான் பாப்டிசுட்டு யோசஃப் டெலம்பர் சூரியனில் இருந்து ஒளி புவியை அடைய 8 நிமிடங்களும் 12 வினாடிகளும் ஆவதாகக் கணக்கிட்டார். இதனைக்கொண்டு ஒளியின் வேகம் வினாடிக்கு 300,000 கிலோமீற்றர்களை விடக் கூடியதாக கணக்கிட்டார். தற்போது இது திருத்தப்பட்டு சூரியொளி புவியை அடைய 8 நிமி 19 வினாடிகளாவதாகவும் ஒளியின் வேகம் வினாடிக்கு 299,792.458 ஆகவும் கணகிடப்பட்டுள்ளது.
 
ரோமர் பணிபுரிந்த பாரிசிலுள்ள வான்வெளி ஆய்வகத்தில் ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்தவராக ரோமருக்கு நினைவுப்பட்டயம் வைக்கப்பட்டுள்ளது.
 
==மேற்சான்றுகள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439480" இருந்து மீள்விக்கப்பட்டது