"சேக்கிழார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
==பெரியபுராணம் ==
 
[[பெரியபுராணம்]] என்று அழைக்கப்படும் சைவத் [[தமிழ்]] நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. [[சுந்தரமூர்த்தி நாயனார்]] இயற்றிய [[திருத்தொண்டர்திருத்தொண்டத் தொகை]], [[நம்பியாண்டார் நம்பி]]யின் [[திருத்தொண்டர் திருவந்தாதி]] என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே ''உலகெலாம்'' என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை.
 
திருத்தொண்டர் புராணச் சாரம், திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள். <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=74}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439844" இருந்து மீள்விக்கப்பட்டது