கல்லீரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கல்லீரலின் செயல்பாடுகள்: மேற்கோள் இணைப்பு (edited with ProveIt)
மேற்கோள் இணைப்பு (edited with ProveIt)
வரிசை 5:
'''கல்லீரல்''' (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது [[உடல்|உடலின்]] ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. [[முதுகெலும்பி]]களிலும், வேறுபிற [[விலங்கு]]கள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது [[மனிதர்|மாந்தர்களில்]] வயிற்றறை/வயிற்றுக் குழியின் (Abdominal cavity) வலது மேல் பக்கத்தில், [[பிரிமென்றகடு|பிரிமென்றகட்டிற்குக்]] கீழாக அமைந்திருக்கும். இதற்குக் கீழாக [[பித்தப்பை]]யும், இடது புறமாக [[இரைப்பை|இரைப்பையும்]] இருக்கின்றது. இதுவே உடல் உள்ளுறுப்புக்கள் யாவற்றிலும் மிகப்பெரிய உறுப்பாகும். மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் [[சுரப்பி]] ஆகவும் இருக்கின்றது. மாந்தர்களில் காணப்படும் [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] மிகப் பெரியது என்று பார்த்தால், அது [[தோல்|தோலாகும்]] .
 
சிறுகாலத்திற்கு ஆற்றலைச் சேமித்து வைக்கும் [[வேதிப்பொருள்|வேதிப்பொருளாகிய]] [[கிளைக்கொஜன்|கிளைக்கொஜனைச்]] சேமித்து வைத்தலும், உணவு [[சமிபாடு|செரிப்பதற்கு]] உதவி செய்யும் [[காரம் (வேதியியல்)|காரத்தன்மை]] கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் [[கொழுப்பு]] சமிபாட்டில் உதவும் [[பித்தநீர்|பித்தநீரை]] உண்டாக்குவதும், [[செங்குருதியணு|செங்குருதியணுக்களைச்]] சீர்செய்து [[குருதி]]யைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள [[குருதி நீர்மம்]], மற்றும் [[புரதம்|புரதப்]] பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு [[நச்சுத்தன்மை]] கொண்ட பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.<ref name="The Liver" /><ref>{{cite web | url=http://www.hepatitis.org.uk/s-crina/liver-f3-main3.htm | title=The Healthy Liver | accessdate=சூன் 19, 2013}}</ref>
 
[[மனிதர்|மாந்தர்]]களில் கல்லீரல் பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு. கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் இதனை ''உடலின் வேதிப்பொருள் தொழிலகம்'' என்று கருதுவது பொருந்தும். கல்லீரல் செரித்த உணவை [[குருதி|இரத்தத்தில்]] இருந்து சிறிதளவு எடுத்துச் சேமித்து வைக்கும் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. பின்னர் தேவைப்படும்பொழுது குருதியில் மீண்டும் இடுகின்றது.
வரிசை 18:
== கல்லீரலின் செயல்பாடுகள் ==
மனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிப்பதாக் கூறப்படுகின்றது
<ref name="The Liver">{{cite web|url=http://medicalcenter.osu.edu/patientcare/healthcare_services/liver_biliary_pancreatic_disease/liver_anatomy_function/Pages/index.aspx | title=The Liver: Anatomy and Functions | publisher=The Ohio State University, Wexner Medical Centre | accessdate=சூன் 19, 2013}}</ref>. பித்தநீர் சுரக்கவும், இரும்பு மற்றும் உயிர்ச்சத்துக்களைத் தேக்கி வைக்கவும், உட்கொள்ளும் உணவைச் [[சமிபாடு|செரித்து]] ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும், இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும் [[நொதியம்|நொதியங்களையும்]] உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.
 
கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த [[செங்குருதியணு]]க்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் காமாலை நோய் உண்டாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கல்லீரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது