"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

847 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(→‎கல்லீரலின் செயல்பாடுகள்: உள்ளிணைப்பு, திருத்தம்)
 
கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த [[செங்குருதியணு]]க்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு [[கொழுப்பு]] உணவைச் செரிக்க வைக்க உதவும். கல்லீரலில் உருவாகும் பித்தநீர் [[பித்தப்பை]]யில் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும். கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் [[மஞ்சள் காமாலை]] நோய் உண்டாகும்.
 
உணவு சமிபாட்டின் பின்னர் உருவாகும் எளியவடிவிலான [[ஊட்டக்கூறு|ஊட்டக்கூறுகள்]], தேவைக்கு அதிகமாக இருக்கையில் வேறு வடிவுக்கு மாற்றப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படும். பின்னர் உடலுக்கு ஊட்டக்கூறுகளின் தேவை ஏற்படுகையில், எளிய வடிவில் மாற்றப்பட்டு, [[குருதி]]யினூடாக தேவைப்படும் இடத்துக்கு கொண்டு செல்லப்படும்.
 
== கல்லீரல் நோய்கள் ==
23,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1440820" இருந்து மீள்விக்கப்பட்டது