கோவூர் கிழார் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==இவர் சொல்லும் செய்திகள்==
கோவூர் கிழார் காலத்துச் சோழர்களான நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்), கிள்ளிவளவன் (குராப்பள்ளித் துஞ்சியவன்) ஆகிய நால்வரையும் இவர் நேரில் கண்டு பாடியுள்ளார்.
 
* சோழன் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆண்டுகொண்டிருந்த உறையூரைக் கைப்பற்ற முற்றுகை யிட்டான். <ref>புறநானூறு 45</ref> வெற்றிக்குப் பின்னர் உறையூரில் இருந்துகொண்டு ஆண்டுவந்தான். <ref>வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த பசு மண் குரூஉத் திரள் போல, அவன் கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. (புறம் 32) குடுமி = உச்சிப்பிள்ளையார் கோயில் மலை. இது குயவர் குழந்தைகள் மண்பாண்டம் செய்யச் சக்கரத்தில் வைத்த பசுமண் போல இருந்ததாம்</ref> நலங்கிள்ளியின் குதிரை குடகடலை நோக்கிப் பாய்ந்து வென்றபின் வடபுலத்தை நோக்கி வலம்வருமோ என்று வடபுலத்தரசு நடுங்குமாம. <ref>புறநானூறு 31</ref> பாண்டிய நாட்டிலிருந்த 'ஏழில் கதவம்' கோட்டையை வென்று தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான். <ref>தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை - புறநானூறு 33</ref> பரிசில் வேண்டி வருபவர்களுக்கு தான் வென்ற வஞ்சி, மதுரை நகரங்களையே தருவானாம். <ref>புறநானூறு 32</ref>
===சோழன் நலங்கிள்ளி===
* பகைநாட்டு மக்கள் தீக்கனா காணும்படி சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போரிடுவானாம். <ref>புறநானூறு 41</ref> விறகு வெட்டிக்குப் பொன்முடிச்சு கிடைப்பது போல இந்தக் கிள்ளிவளவன் புலவர்களுக்குப் பரிசில்களை வழங்குவானாம்.
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆண்டுகொண்டிருந்த உறையூரைக் கைப்பற்ற முற்றுகை யிட்டான். <ref>புறநானூறு 45</ref> வெற்றிக்குப் பின்னர் உறையூரில் இருந்துகொண்டு ஆண்டுவந்தான். <ref>வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த பசு மண் குரூஉத் திரள் போல, அவன் கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. (புறம் 32) குடுமி = உச்சிப்பிள்ளையார் கோயில் மலை. இது குயவர் குழந்தைகள் மண்பாண்டம் செய்யச் சக்கரத்தில் வைத்த பசுமண் போல இருந்ததாம்</ref> நலங்கிள்ளியின் குதிரை குடகடலை நோக்கிப் பாய்ந்து வென்றபின் வடபுலத்தை நோக்கி வலம்வருமோ என்று வடபுலத்தரசு நடுங்குமாம. <ref>புறநானூறு 31</ref> பாண்டிய நாட்டிலிருந்த 'ஏழில் கதவம்' கோட்டையை வென்று தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான். <ref>தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை - புறநானூறு 33</ref>
* சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கரை வென்றான். இதனால் வஞ்சிமுற்றம் <ref>கருவூர்</ref> இவன் ஆளுகைக்கு உட்பட்டது. முற்றத்திலிருந்து வீட்டுக்குள் நுழைவது போல இவன் சேரரின் குடநாட்டையும் வென்றான். <ref>புறநானூறு 373</ref>
===கொடை===
பரிசில் வேண்டி வருபவர்களுக்கு தான் வென்ற வஞ்சி, மதுரை நகரங்களையே தருவானாம். <ref>புறநானூறு 32</ref>
===உலகியல்===
*பொருளும் இன்பமும் சிறப்புக்குரியவை. என்றாலும் அவை அறத்தைப் பின்பற்றும். <ref>புறநானூறு 31</ref>
 
===வேந்தனுக்கு அறிவுரை===
* நலங்கிள்ளி உறையூரை முற்றியிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். கோவூர் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறினார். போரிடுபவன் சேரனோ, பாண்டியனோ அல்லன். சோழன். யார் தோற்றாலும் சோழனுக்குத் தோல்வி. இதனைக் கண்டு பகைவர் நகைப்பர் என அறிவுரை கூறினார். <ref>புறநானூறு 45</ref> இதனைக் கேட்ட நெடுங்கிள்ளி, நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் எனத் தெரியவருகிறது.
* நலங்கிள்ளியிடம் இருந்த இளந்தத்தன் என்னும் புலவர் முற்றுகையின்போது உறையூருக்கு வந்தார. ஒற்று வந்தார் என்று நெடுங்கிள்ளி அவரைக் கொல்லப் புகுந்தார். புலவர் பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாதவர் எனக் கோவூர் கிழார் விளக்கிப் புலவர் இளந்தத்தனைக் காப்பாற்றினா. <ref>புறநானூறு 47</ref>
* சோழன் குளமுற்றத்துத் தூஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலின் இட்டுக் கொல்லச் சென்றான். யானையைக் கண்டவுடன் அழுகையை மறந்து சிரிக்கும் குழந்தை உள்ளத்தை எடுத்துச் சொல்லி கோவூர் கிழார் குழந்தைகளைக் காப்பாற்றினார். புறநானூறு 46
===பிற பாடல்கள்===
*உலகியலை நன்கு உணந்த இவர் பொருளும் இன்பமும் சிறப்புக்குரியவை. என்றாலும் அவை அறத்தைப் பின்பற்றும் எனக் குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 31</ref>
* பகை மன்னன் வெல் வீரன் மார்பில் பாய்ந்தது. வீரன் வேல் பகைமன்னனின் பட்டத்து யானைமேல் பாய்ந்தது. இதனைக் கண்ட பகைமன்னனின் களிறுகளெல்லாம் அவற்றின் பிடிகள் <ref>பெண்யானைகள்</ref> நாணும்படிப் புறங்கொடுத்தன - என்று கூறும் இவரது [[மூதின் முல்லை]]ப் பாடல் குடிமக்களின் அக்காலக் கடமையைப் புலப்புத்துகின்றன.
* இவரது அகத்திணைப் பாடல்கள் இரண்டில் ஒன்று முல்லைத்திணைப் பாடல். <ref>குறுந்தொகை 65</ref> ஆண் பெண் மான்கள் மருவி விளையாடுவதைப் பார்த்துக் காதலர் விரைந்து வந்துவிடுவார் எனத் தோழி தலைவியைத் தேற்றுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
* மற்றொரு பாடலில் <ref>நற்றிணை 393</ref> வானத்து எரிமீனைக் குறிப்பிடும் அழகிய உவமை ஒன்று உள்ளது. கானவன் யானைகளை ஓட்ட ஞெகிழியை <ref>தீப்பந்தத்தை</ref> வீசுவானாம். அது எரிமீன் விழுவது போலத் தோன்றுமாம்.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கோவூர்_கிழார்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது