பிங்கெனின் ஹில்டெகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
வரிசை 37:
பேரரசர்கள், திருத்தந்தையர்கள், ஆயர்கள், அருள்சகோதரிகள் மற்றும் உயர்குலப் பிரபுக்களுக்கு எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்கள், ஒரு நாடகம் உட்பட 72 பாடல்கள், ஏழு புத்தகங்கள் உட்பட ஹில்டெகார்ட் எழுதியவை இன்றும் உள்ளன. இவர் எழுதிய இசைக் குறிப்புகள் இக்காலத்திலும் வாசிக்கக்கூடிய வடிவில் உள்ளன. இவரது எழுத்துக்களில் அறிவியல், கலை, மதம் ஆகிய அனைத்துத் துறைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரையும் இறைவனின் சாயலாகப் பார்த்த இவர், சமூகநீதிக்காவும், ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காவும் அயராது உழைத்தவர். 12ம் நூற்றாண்டில் திருச்சபையில் பெரும் மாற்றத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் வித்திட்டவர் இவர் என நம்பப்படுகின்றது.
 
== புனிதர் பட்டமளிப்பு ==
இவருக்கு முறைமையான புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை எனினும் இவரின் பெயர் புனிதர்கள் பட்டியலில் இருந்தது, இவரின் புனிதர் பட்ட நிலையில் இருந்த குழப்பத்தை நீக்க திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 10 மே 2012 இவரின் பக்தியை அதிகாரப்பூர்வமான ஒன்றாக அறிவித்தார். இவரை [[திருச்சபையின் மறைவல்லுநர்]] என 7 அக்டோபர் 2012இல் [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] அறிவித்தார்
 
== இசையும் எழுத்தும் ==
இவர் அறுப்பத்து ஒன்பது இசைத் தொகுப்புகளை செய்தவர். அதில் அதிகம் அறியப்பட்டது "நல்லொழுக்கங்களின் விளையாட்டு" (ஓர்டா விர்டட்டும்) ஆகும். இவர் இசைத்தொகுப்புகள் செய்ததோடு மூன்று நூல்களையும் எழுதியுள்ளார். அவை,
# சிவியாசு (வழியை அறி) - கி. பி. 1151ல் எழுதி முடிக்கப்பட்டது.
# இலிபெர் விட்டே மெரிடோரியம் (வாழ்க்கைகான தகுதிகள்)
# இலிபெர் இடிவினோரம் ஒபெரம் (கடவுளின் செயல்கள்)
 
மேலும் இவர் இயற்கைசார் ஆய்வு நூலையும் (ஃபிசிசியா) எழுதியுள்ளார். இவர் தன் நூல்களில் தன்னென உருவாக்கிக் கொண்ட இருபத்தி மூன்று தனி எழுத்துருக்களையும் பயன்படுத்தினார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிங்கெனின்_ஹில்டெகார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது