யாழ்ப்பாணத்துச் சீதன முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
==தேசவழமையும் சீதனமும்==
ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் மூலம் இணைந்து குடும்பமாக வாழ்கின்றபோது அவர்களுக்கு வந்து சேரும் சொத்துக்களைத் தேசவழமை மூன்று வகையாக இனம் காணுகின்றது. ஆண் கொண்டுவரும் சொத்து ''[[முதுசொம்]]'' என்றும், பெண் கொண்டுவரும் சொத்து ''சீதனம்'' என்றும், இருவரும் குடும்பம் நடத்திவரும் போது தேடிக்கொள்ளும் சொத்து ''[[தேடியதேட்டம்]]'' என்றும் அழைக்கப்படுகின்றன. இருவருக்கும் ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்தால், முதுசொம் ஆண்பிள்ளைகளுக்கும், சீதனம் பெண்பிள்ளைகளுக்கும் சேரும். தேடியதேட்டத்தில் இருபாலாருக்கும் பங்கு உண்டு. ஆனாலும், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலேயே இது இறுக்கமாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்திலேயே, பெண்பிள்ளைகளின் திருமணத்தின்போது முதுசொம், சீதனம், தேடியதேட்டம் என்ற வேறுபாடின்றி எல்லாவகைச் சொத்துக்களிலிருந்தும் சீதனம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.<ref>பத்மநாதன், சி., ''இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும்'', குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 85, 86.</ref>
 
எனவே தேசவழமையின்படி, சீதனம் என்பது தாய்வழியாகப் பெண்பிள்ளைகளுக்குச் சேருகின்ற சொத்துரிமையின் பாற்பட்டது. இது மருமக்கட்தாய முறையின் எச்சமாகக் கருதப்படுகின்றது. திருமணமான ஒரு பெண் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனால் அவள் கொண்டுவந்த சீதனம் அவளுடைய சகோதரிகளுக்கோ, அவர்கள் இல்லாதவிடத்து அவர்களது பெண்பிள்ளைகளுக்கோ சேருமேயன்றி அவளது ஆண் சகோதரர்களுக்கோ அல்லது ஆண்வழி வாரிசுகளுக்கோ செல்வதில்லை.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்துச்_சீதன_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது