"அணுக்கரு ஆயுதங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,872 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி 2012 அளவில் உலகில் 17,000க்கும் மேற்பட்ட அணுவாயுதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கிட்டத்தட்ட 4,300 ஆயுதங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.<ref name="nuclearweapons1" />
 
==வகைகள்==
 
அணுவாயுதத்தில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன. அவை அணுக்கருப் பிளவின் மூலம் மட்டும் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியன மற்றும் அணுக்கரு இணைவின் மூலம் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியனவாகும். இவற்றுள் அணுக்கரு இணைவின் மூலம் இயங்கும் அணுவாயுதத்தில் தாக்கத்தை ஆரம்பிப்பதற்கான சக்தி அணுக்கருப் பிளவின் மூலம் வழங்கப்படும். இதன் விளைவாக உருவாகும் அணுக்கரு இணைவுத் தாக்கம் அதிகளவிலான சக்தியை வெளிப்படுத்தும்.
 
===அணுக்கருப் பிளவு ஆயுதங்கள்===
 
பாவனையிலுள்ள அனைத்து அணுவாயுதங்களும் தமது வெடிப்புச் சக்தியில் சிறியளவான பகுதியை அணுக்கருப் பிளவுத் தாக்கங்களினால் பெறுகின்றன. தனியே அணுக்கருப்பிளவுச் சக்தியை மாத்திரம் வெளியிடும் ஆயுதங்கள் ''அணுகுண்டு'' எனப்படும்.
 
அணுக்கருப் பிளவு ஆயுதங்களில் பிளவுறு பொருளொன்று (செறிவாக்கப்பட்ட யுரேனியம் அல்லது புளூட்டோனியம்) அவதித் திணிவிலும்-அடுக்குக்குறி வளர்ச்சியுடைய கருச் சங்கிலித் தாக்கத்தை ஏற்படுத்தத் தேவையான திணிவு-சிறிது கூடியளவில் சேர்க்கப்படும். இதற்காக இரண்டு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. முதல் வகையில் அவதித் திணிவிலும் குறைந்த பிளவுறு பொருளின் மீது இன்னொரு சிறு திணிவுடைய பிளவுறு பொருள் பாய்ச்சப்படும். மற்றைய வகையில் இரசாயன வெடிபொருள்களைப் பயன்படுத்தி பிளவுறு பொருள் நெருக்கப்பட்டு அதன் அடர்த்தி மிக அதிகமாக்கப்படும். இரண்டாவது முறையானது முதலாவது முறையிலும் மிகவும் சிக்கலானது என்பதுடன், புளூட்டோனியம் வகை ஆயுதங்களில் மாத்திரமே பயன்படுத்தப்படும்.
 
அணுக்கரு ஆயுத உருவாக்கத்தில் உள்ள பாரிய சவால் அணுவாயுதம் தானாக அழிவதற்கு முன் குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதாகும். பிளவு ஆயுதங்களினால் வெளியிடப்படும் சக்தி ஒரு தொன் TNT அளவு சக்தியிலிருந்து 5லட்சம் தொன் TNT அளவு வரை வேறுபடும்.<ref name="Hansen">The best overall printed sources on nuclear weapons design are: Hansen, Chuck. ''U.S. Nuclear Weapons: The Secret History.'' San Antonio, TX: Aerofax, 1988; and the more-updated Hansen, Chuck. ''Swords of Armageddon: U.S. Nuclear Weapons Development since 1945.'' Sunnyvale, CA: Chukelea Publications, 1995.</ref>
 
அனைத்து பிளவுத் தாக்கங்களும் பிளவுப் பொருட்கள் எனப்படும், அணுக்கருவின் கதிர்த் தொழிற்பாடுடைய துகள்களை உருவாக்குகின்றன. பல பிளவுப் பொருட்கள் உயர்கதிர்த் தொழிற்பாடு (குறுகிய வாழ்காலம்) அல்லது நடுத்தரக் கதிர்த் தொழிற்பாடு (உயர் வாழ்காலம்) கொண்டன. இவை கட்டுப்படுத்தா நிலையில் கடும் கதிர்த்தொழிற்பாடு மாசுபாட்டை ஏற்படுத்தும். பிளவுப் பொருட்கள், கட்டுப்படுத்தா அணுக்கருத் தாக்கங்களின் முக்கிய கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களாகும்.
 
அணுவாயுதங்களில் முக்கிய பிளவுப் பொருளாகப் பயன்படுவது யுரேனியம்-235 மற்றும் புளூட்டோனியம்-239 என்பனவாகும். மிகவும் குறைந்தளவில் பயன்படுவது யுரேனியம்-239 ஆகும். நெப்டியூனியம்-237 மற்றும் அமெரீசியத்தின் சில சமதானிகளும் பயன்படுத்தப்படலாம். எனினும் இச் சமதானிகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.<ref>{{cite web
| author = [[David Albright]] and Kimberly Kramer
| date = 2005-08-22
| title = Neptunium 237 and Americium: World Inventories and Proliferation Concerns
| url = http://isis-online.org/uploads/isis-reports/documents/np_237_and_americium.pdf
| publisher = [[Institute for Science and International Security]]
| accessdate = 2011-10-13
}}</ref>
 
== வரலாறு ==
3,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1443959" இருந்து மீள்விக்கப்பட்டது