விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 4:
 
விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள. விண்மீன்களில் உள்ள [[அணுக்கரு]]க்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு [[அணுக்கரு இணைவு]] வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் ஆற்றலின் ஒரு முகம்தான் கண்ணுக்குப் புலப்படும் ஒளி.
 
 
[[சூரிய மண்டலம்|சூரிய மண்டல]]த்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் [[புராக்சிமா செண்டோரி]] என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 [[ஒளியாண்டு]]கள் (4 இலட்சம் கோடி [[கிலோமீட்டர்]]கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் செல்லும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 [[கோடி]] கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
 
பெரும்பாலான விண்மீகள் 100 கோடிக்கும், 1000 கோடிக்குமிடைப்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சில அண்டத்தின் மதிப்பிடப்பட்ட வயதான 1370 கோடி ஆண்டுகளளவு தொன்மையானவை. மிகச் சிறிய நட்சத்திரங்களிலிருந்து நமது சூரியனிலும் ஆயிரம் மடங்குகள் பெரிதான, அதாவது 160 கோடி கிலோமீற்றர் [[விட்டம்|விட்ட]]முள்ள விண்மீன்கள் வரை, அண்டவெளியில் உள்ளன. தங்கள் ஆற்றல் மூலங்களை முற்றாக இழந்தபின், சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் ஒடுங்கி மிகச்சிறிய அளவினதாக மாறிவிடுகின்ற விண்மீன்கள் , [[வெண் குறுமீன்]]கள் (White Dwarf), [[நியூத்திரன் விண்மீன்|நியூத்திரன் விண்மீன்கள்]], [[கருந்துளை]]கள் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.
 
== விண்மீனின் வாழ்க்கை ==
ஒரு விண்மீன் தன் வாழ்க்கையில் மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது. அவை,
# முகிலில் இருந்து முகில் மீனாதல்
# நிலையான விண்மீனாக மாறுதல்
# தளர்தல்
 
=== முகிலிருந்து முகிழ் மீன் ===
{{main|விண்மீன் படிமலர்ச்சி}}
விண்மீன் படிமலர்ச்சியின் முதல் படி [[மாபெரும் மூலக்கூறு முகில்|மாபெரும் மூலக்கூறு முகிலின்]] ஈர்ப்புக் குறுகலில் தொடங்குகின்றது. ஆழ் வெளியில் காணப்படும் வளி, தூசு முகில்களினின்று தான் அனைத்து விண்மீன்களும் உருவாகின்றன. இம்மூலக்கூற்று முகில்கள் பிரதானமாக [[ஐதரசன்]],[[ஈலியம்]] முதனான வாயுக்களைக் கொண்டதாகவும், பல [[ஒளியாண்டு]]கள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும். ஈர்ப்புவிசை காரணமாக இம்மூலக்கூறு முகில் ஒன்று அல்லது பல மையங்களைக் கொண்டதாக சுழன்றுகொண்டிருக்கும். இவ்வாறு சுழலும்போது உயர் அடர்த்தி கொண்ட தொகுதிகளாக ஒடுங்கும். இவை மேலும் மேலும் ஒடுங்கும்போது அவற்றின் சுழற்சி வேகமும் வெப்பநிலையும் அதிகரிக்கும். இவ்வெப்பநிலை 150,000 கெல்வின்(K) அளவை அடையும் போது இம்மூலக்கூற்று முகிலின் நடுப்பகுதி ஒளிர ஆரம்பிக்கும். இவ்விடங்கள் '''முகிழ்மீன்''' (Protostar) எனப்படும்.
 
[[Image:Eagle nebula pillars.jpg|thumb|left|150px|ஹபிள் தொலைநோக்கியின் பார்வையில் “ஆக்கத்தின் தூண்கள்” - கழுகு விண்முகிலில் விண்மீன்கள் உருவாகும் இடம்]].
முகிழ்மீனில் காணப்படும் கூறுகள் மேலும் ஒடுங்குவதால் அதன் வெப்பநிலையும் அமுக்கமும் (அழுத்தம்) மென்மேலும் அதிகரிக்கும். சுழற்சி வேகமும் அதிகரிக்கும். முகிழ்மீனின் உட்புற வெளிப்புற பகுதிகள் வேறுபடுத்தக் கூடியதாக மாற்றமடையும்.உட்புற பகுதி உடுவாகவும் வெளிப்புற பகுதி கோள்கலாகவும் மாற்றம் அடைவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். உட்புற வெப்பநிலை 15,000,000 கெல்வின் அளவை அடையும் போது '''கரு இணைவு'''(Nuclear fusion} நடைபெறும். இதன் போது பெரிய அணுக்கள் சிறிய அணுக்களுடன் இணையும். அநேக ஐதரசன் அணுக்கள் ஈலியம் அணுக்களாக மாறும். பெருமளவு அமுக்கமும் வெப்பமும் வெளியேறும். விண்மீன் தோற்றம் பெற்றுப் பிரகாசிக்கும்.
 
[[பகுப்பு:விண்மீன்கள்]]
 
{{Link FA|es}}
{{Link FA|mk}}
 
[[fi:Tähti#Kehitys]]
 
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது