"அணுக்கரு ஆயுதங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,929 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
| accessdate = 2011-10-13
}}</ref>
 
===அணுக்கரு இணைவு ஆயுதங்கள்===
 
அணுவாயுதங்களில் மற்றைய அடிப்படை வகை அணுக்கரு இணைவின் மூலம் சக்தியை வெளிப்படுத்துவனவாகும். இவ்வாறான ஆயுதங்கள் ''வெப்ப அணுவாயுதங்கள்'' அல்லது ''ஐதரசன் குண்டுகள்'' எனப்படும். இவை ஐதரசனின் சமதானிகளுக்கிடையிலான (டியூட்டிரியம் மற்றும் டிரிடியம்) இணைவுத் தாக்கங்களில் தங்கியிருப்பதன் காரணமாக ''ஐதரசன் குண்டுகள்'' எனப்பட்டன. இவ்வனைத்து ஆயுதங்களும் அவற்றின் சக்தியில் குறிப்பிடத்தக்களவை அல்லது பெருமளவை கருப் பிளவுத் தாக்கங்களினூடாகவே பெற்றுக்கொள்கின்றன. ஏனெனின் இணைவுத் தாக்கங்களை மேற்கொள்வதற்கான தொடக்கியாக பிளவுத் தாக்கங்கள் பயன்படுத்தப்படுவதாலாகும்.<ref>Carey Sublette, [http://nuclearweaponarchive.org/Nwfaq/Nfaq4-5.html#Nfaq4.5.2 Nuclear Weapons Frequently Asked Questions: 4.5.2 "Dirty" and "Clean" Weapons], accessed 10 May 2011.</ref>
 
ஐக்கிய அமெரிக்கா, ரசியா, ஐக்கிய இராச்சியம், சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய ஆறு நாடுகள் மாத்திரமே இதுவரை வெப்ப அணுக்கரு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளன. (இந்தியா இவ்வாறான ஆயுதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதா என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது.)<ref>On India's alleged hydrogen bomb test, see Carey Sublette, [http://nuclearweaponarchive.org/India/IndiaRealYields.html What Are the Real Yields of India's Test?].</ref> வெப்ப அணுவாயுதங்களை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்தலும் அணுக்கருப் பிளவு ஆயுதங்களிலும் சிக்கலானதாகும். எனினும் இன்று உருவாக்கப்படும் பெரும்பாலான அணுவாயுதங்கள் வெப்ப அணுவாயுத வடிவமைப்பையே பயன்படுத்துகின்றன. ஏனெனில் இது மிகவும் வினைத்திறனுடையதாகும்.
 
வெப்ப அணுகுண்டுகள், இணைவு எரிபொருளை நெருக்குவதற்கும் வெப்பப் படுத்துவதற்கும் அணுக்கருப் பிளவு ஆயுதச் சக்தியைப் பயன்படுத்துகின்றன. மெகா தொன் சக்தியை வெளிப்படுத்தும் ஐதரசன் குண்டுகளில் பயன்படுத்தப் படும் "டெல்லர் உலம் வடிவமைப்பில்" கருப்பிளவு ஆயுதமும், இணைவு எரிபொருளும் (டிரிடியம், டியூட்டிரியம் அல்லது லிதியம் டியூட்டிரைட்) விசேடமான கதிர்ப்புத் தெறிப்பு கொள்கலன் ஒன்றினுண் அருகருகே வைக்கப்படும். பிளவு ஆயுதம் வெடிக்கும் போது வெளியாகும் காமாக் கதிர்களும் X-கதிர்களும் முதலில் இணைவு எரிபொருளை நெருக்கிப் பின்னர் அதன் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் உருவாகும் கரு இணைவுத் தாக்கம் பெரும் எண்ணிக்கையான அதிவேக நியூத்திரன்களை உருவாக்கும். இந் நியூத்திரன்கள் வறிதாக்கப்பட்ட யுரேனியம் போன்ற வலுக்குறைந்த பிளவுப் பொருட்களில் பிளவுத்தாக்கத்தைத் தூண்டும். பிளவு ஆயுதத் தாக்கம் "முதற் படி" எனவும் இணைவுத் தாகம் "துணைப் படி" எனவும் அழைக்கப்படும். பெரியளவிலான மெகா தொன் சக்தி கொண்ட ஐதரசன் குண்டுகளில் வெளிப்படும் சக்தியில் அரைப்பங்கு வறிதாக்கப்பட்ட யுரேனியம் மூலமான பிளவுத் தாக்கத்திலிருந்தே பெறப்படும்.<ref name="Hansen" />
 
இண்று உருவாக்கப்படும் பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் மேற்கூறப்பட்ட "இரு படி" ஒழுங்கமைப்பையே பயன்படுத்துகின்றன. ஆயினும் மேலதிக தாக்கப் படிகளையும் சேர்க்க முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொரு படியும் அடுத்த படிக்கான எரிபொருளை வெடிக்கச் செய்யும். இதன் மூலம் பெரும் சக்திக் கொள்ளளவு கொண்ட வெப்ப அணுவாயுதங்களை உருவாக்க முடியும். இதுவரை வெடிக்க வைக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது சோவியத் ஒன்றியத்தின் "சார் குண்டு" ஆகும். இதன் வெடிப்பின் போது 50 மெகா தொன் TNT சக்தி வெளியிடப்பட்டது. இது ஒரு மூன்று படி ஆயுதமாகும். பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் இதனிலும் சிறியன. இதற்குக் காரணம், ஏவுகணைகளின் இடப் பற்றாக்குறை மற்றும் நிறை என்பனவாகும்.<ref name="Sublette">{{cite web |url=http://nuclearweaponarchive.org/ |last=Sublette |first=Carey |title=The Nuclear Weapon Archive |accessdate=2007-03-07}}</ref>
 
== வரலாறு ==
3,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1444285" இருந்து மீள்விக்கப்பட்டது