அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 91 interwiki links, now provided by Wikidata on d:q11652 (translate me)
"ஒரு முழு அலைவை நிறைவு செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
ஒரு முழு அலைவை நிறைவு செய்யத் தேவைப்படும் கால அளவே அலைவுக்காலம் (ஆங்கிலம் : period )ஆகும்.
[[படிமம்:Sine waves different frequencies.png|thumb|right|360px|வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட [[சைன்]] அலைகள் மேலே உள்ளன. ஒவ்வொரு அலையும் தனக்கு மேலே உள்ள அலையை விட கூடுதல் அதிர்வெண் உடையது.]]
இது இயற்பியலில் ''''T'''' எனும் ஆங்கில எழுத்தின் மூலம் குறிக்கப்படுகின்றது.
'''அதிர்வெண்''' அல்லது '''அலைவெண்''' (Frequency) என்பது ஒரு குறிப்பிட்ட நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி [[நிகழ்வு]] நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இதனை எளிமையாக விளக்க ஓர் ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம். ஊஞ்சலை ஆட்டிவிட்டால் அது அசையாது நிற்கும் நிலையில் இருந்து முன்னே நகர்ந்து எட்ட விலகி ஓர் எல்லைக்குப் போய், பிறகு மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து, பின் எதிர்ப்புறமாகப் போய்ப் பின்னர் தொடங்கிய இடத்துக்கே வரும் பொழுது அது ஒரு சுழற்சி அடைந்தது. ஆனால் அது மேலும் முன்னும் பின்னுமாய் அலையும். ஒரு மணித்துளி நேரத்தை ஓர் அலகுநேரம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனை முழுச் சுழற்சிகள் அந்த நேரத்தில் நிகழ்ந்தன என்பது அதிர்வெண் அல்லது அலைவெண் ஆகும். ஒரு நொடிக்கு ஒரு முழு சுழற்சி என்னும் கணக்கு ஓர் [[ஏர்ட்சு]] (Hertz) என்று கூறப்பெறுகின்றது. முன்னர் இதனை நொடிக்கு ஒரு சுழற்சி (cycle per second) என்று குறித்தனர்.
 
[[ஒலியலை|ஒலியலைகளும்]], [[ஒளியலை|ஒளியலைகளும்]] ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் நாம் உணருமாறு பண்புகள் கொண்டிருக்கும். ஒலியினது அதிர்வெண் அதன் சுருதியை தீர்மானிக்க உதவுகின்றது. அதிக அல்லது உயர்ந்த அதிர்வெண் கொண்ட துடிப்பலைகள் "கீச்" என்று உணரப்படும் உயர்ந்த சுருதியுடையனவாகவும், குறைந்த அதிர்வெண்கள் கொண்ட ஒலியலைகள் (அடிவயிற்றில் இருந்து எழுவதுபோன்ற ஒலியாகிய) தாழ்ந்த சுருதி உடையனவாகவும் இருக்கும்.
 
இதே போல ஒளியலையின் அதிர்வெண்ணைப் பொருத்து, அதன் நிறம் தென்படுகின்றது. அதிக அதிர்வெண் கொண்ட காணக்கூடிய ஒளி அலைகள் நீலமாகவும், குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள் சிவப்பு நிறமாகவும் கண்ணுக்குத் தெரியும்.
[[File:EM spectrum.svg|thumb|right|400px|ஒளி அலைகளின் அதிர்வெண்ணும் அலைநீளமும். சிவப்பு நிறம் குறைந்த அதிர்வெண், நீல நிறம் அதிக அதிர்வெண்]]
 
== வரைவிலக்கணமும் அலகும் ==
 
[[SI அடிப்படை அலகுகள்|அனைத்துலக அடிப்படை அலகின்]] படி, அதிர்வெண் [[ஏர்ட்சு]] (Hertz) என்ற அலகில் அளக்கப்படுகிறது. இந்தப் பெயரானது, [[இடாய்ச்சுலாந்து|இடடய்ச்சுலாந்தைச்]] சேர்ந்த [[இயற்பியல்|இயற்பியலாளரான]], [[என்றிக் ஏர்ட்சு]] அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது. ஒரு ஏர்ட்சு என்பது, ஒரு நிகழ்வு ஒரு [[நொடி|நொடியில்]] எத்தனை முழுச் சுழற்சிகள் இடம்பெறும் என்கின்ற அளவாகும்.
 
==அலைகளின் அதிர்வெண்==
 
ஆவர்த்தன அலைகளின் அதிர்வெண் மற்றும் அலைநீளம் இடையே எதிர்மறையான தொடர்பு உண்டு; அதிர்வெண் f அலைநீளம் λ (லேம்டா) க்கு நேர்மாறான விகிதசமத்தில் உள்ளது. அலைவேகம் V ஐ அலைநீளம் λ ஆல் வகுக்க வருவது அதிர்வெண் f இற்கு சமமாக இருக்கும்:
:<math>
f = \frac{v}{\lambda}.
</math>
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் c ஆக இருக்க இம்மின்காந்த அலையின் அதிர்வெண்:
:<math>
f = \frac{c}{\lambda}.
</math>
ஒருநிற அலைகள் ஒரு ஊடகத்தில் இருந்து இன்னொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் அதிர்வெண் மாறுவது இல்லை. வேகம், அலைநீளம் ஊடகத்திற்கு தக்கவாறு மாறுகிறது.
 
== மேற்கோள்கள் ==
 
<references/>
 
== மேலும் பார்க்க ==
* [[அலைநீளம்]]
 
[[பகுப்பு:இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:ஒலியியல்]]
[[பகுப்பு:ஒலி]]
[[பகுப்பு:அலை இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது