மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''இலத்திரனியல்''' (''electronics'') அல்லது '''மின்னணுவியல்''' என்பது [[மின்குமிழ்]], [[கடிகாரம்]], [[தொலைபேசி]], [[வானொலி]], [[தொலைக்காட்சி]], [[கணினி]] என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்கைகளை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.
 
இலத்திரனியலில் செயல்படு மின்கூறுகளான [[வெற்றிடக் குழல்]]கள், [[திரிதடையம்|திரிதடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[நுண்தொகுப்புச் தொகுப்புச்சுற்றுசுற்று|நுண் தொகுப்புச்சுற்று]]க்களும், செயலறு மின்கூறுகளான [[மின்தடையம்]], [[மின்தேக்கி]], [[மின்தூண்டி]]களும் ஒன்றிணைந்த [[மின்சுற்று]]கள் பெரும் பங்காற்றுகின்றன. செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் இலத்திரனோட்டத்தை கட்டுப்படுத்தும் பண்பும் நலிவுற்ற சமிக்கைகளை வலிப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், [[தொலைத்தொடர்பு]], மற்றும் சமிக்கை முறைவழியாக்கம் துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இலத்திரனியல் கருவிகள் [[நிலைமாற்றி]]களாகப் பயன்படுத்தகூடும்; இது எண்ணிம தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. [[மின்சுற்றுப் பலகை]]கள் போன்ற ஒன்றிணைப்புத் தொழில்நுட்பங்கள், இலத்திரனியல் பொதியல் தொழில்நுட்பங்கள், மற்றும் பல்வேறு தொடர்பு கட்டமைப்புகள் மின்சுற்று செயல்பாட்டை முழுமையாக்கி கலவையான மின்கூறுகள் முறையான [[ஒருங்கியம்|ஒருங்கியமாக]] செயல்படச் செய்கின்றன.
 
== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது