முதுசொம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''முதுசொம்''' என்பது, பொதுவாக முந்திய [[தலைமுறை]]யிலிருந்து கிடைக்கும் சொத்தைக் குறிக்கிறது. [[சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி]], முதுசொம் என்பதற்கு ''முதுபொருள்'', ''பூர்வீகச் சொத்து'' எனப் பொருள் தருகிறது.<ref>[http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.17724.0.1.tamillex சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் ''சொம்'' என்பதற்கான பதிவு]</ref> ஒருவர் தான் உழைத்துச் சேர்க்கும் சொத்திலிருந்து இது வேறுபடுகிறது. பேச்சு வழக்கில் இதை ''முதிசம்'', ''முதுசம்'' என்றும் சொல்வது உண்டு.
 
==சொற்பிறப்பு==
"முதுசொம்" என்னும் சொல், ''முதுமை'', ''சொம்'' என்னும் இரு சொற்களால் ஆனது. ''முதுமை'' என்பது இங்கே ''முந்திய'', ''பழைய'' போன்ற பொருள்களைத் தருவது. ''சொம்'' என்பதற்கு ''சொத்து'',<ref>[http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:4351.tamillex சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் ''சொம்'' என்பதற்கான பதிவு]</ref> ''உரிமை'' போன்ற பொருள்கள் உள்ளன. இவ்விரு சொற்களும் சேர்ந்து பழைய தலைமுறையிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைக்கும் சொத்தைக் குறித்தது.
 
==முதுசொமும் தேசவழமையும்==
{{main|முதுசொம் (தேசவழமை)}}
இலங்கையின் வட பகுதியின் மரபுவழிச் சட்டமான [[தேசவழமைச் சட்டம்|தேசவழமை]], ஒரு குடும்பத்தில் கணவன் தனது முன்னோரின் வழி பெறுகின்ற சொத்தையே ''முதுசொம்'' என வரையறை செய்கிறது. மனைவி தனது முன்னோரிடம் இருந்து கொண்டு வருகின்ற சொத்துக்களை ''முதுசொம்'' என்ற சொல்லால் குறிப்பிடுவது இல்லை. மிகப் பழைய தேசவழமையின்படி, முதுசொச் சொத்துக்கள் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அதில் பெண் வாரிசுகளுக்கு உரிமை கிடையாது. எனினும் பிற்காலத்தில், பெண்களுக்குக் கொடுக்கவேண்டிய சீதனத்தின் அளவு அதிகரித்தபோது, முதுசொச் சொத்துக்களையும் பெண் பிள்ளைகளுக்கே கொடுக்க வேண்டிய நிலை உருவானது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/முதுசொம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது