கன்னங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
|website=
}}
திருநெல்வேலி மாவட்டத்தின் கடைப்பகுதியில் உள்ள லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஒரு அழகான கிராமம்.லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட 6கிராமங்களில் பெரியது கன்னங்குளம்.

அமைவிடம்: இது திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 80கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இது வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியாகும்.இராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது.இக்கிராமம் வள்ளியூரிலிருந்து 30கிமீ தொலைவிலும்,லெவிஞ்சிபுரத்திலிருந்து 2கிமீ தொலைவிலும், இராதாபுரத்திலிருந்து 25கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையாக கன்னியாகுமரி-கூடங்குளம் தேசிய நெடுஞ்சாலையும்,தெற்கில் இந்து மகா சமுத்திரமும்,கிழக்கில் கூட்டபுளி என்னும் மீன்பிடி கிராமமும் மற்றும் மேற்கே பிராந்தநேரி என்னும் சிறு நதியும் அமைந்துள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் அழகினை கொண்ட இவ்வூரின் மத்தியில் முத்தாரம்மன் கோவில் ஒன்று உள்ளது
 
ஆன்மீக தலங்கள் இயற்கை எழில் கொஞ்சும் அழகினை கொண்ட இவ்வூரின் மத்தியில் முத்தாரம்மன் கோவில் ஒன்று உள்ளது.இந்த கோவிலானது 80வருடங்களுக்கு முன்னரே கட்டப்பட்டது.தற்போது புதுப்பிக்கப்பட்டு,வருடத்திற்கு இரு முறை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.பொதுவாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முத்தாரம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.வருடந்தோறும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் வைகாசி மாதம் 10நாள் திருவிழாவும், கார்த்திகை மாதம் 3நாள் கொடைவிழாவும் நடத்தப்படுகிறது.திருவிழா நாட்களில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அம்மனை வழிபட்டு அம்மன் அருள் பெருகின்றனர்.ஊரில் எந்தவொரு விழாவாக இருந்தாலும் அம்மனை வழிபட்டு ஆரம்பிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 
மேலும் இவ்வூரில் இசக்கியம்மன் கோவில்,சுடலைமாடன் கோவில்,பெருமாள் சுவாமி கோவில் மற்றும் பலவகையான கோவில்கள் அமையபெற்றுள்ளன.
 
மற்றும் கிறிஸ்துவ தலங்களான ஆர்.சி.சபை, கானான் சபை,சி.எஸ்.ஐ சபை,பெந்தயகோஸ்தே சபை முதலிய சபைகள் உள்ளன.
 
 
 
கல்வி,தொழில் இவ்வூரில் ஒரு மேல்நிலைப்பள்ளியும்,ஒரு நடுநிலைப்பள்ளியும்,இரு மலழையர் பள்ளிகளும் செயல்பட்டுவருகின்றன. இங்கு வாழும் இளந்தலைமுறையினர் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்களாகவே உள்ளனர்.இங்குள்ள பெரும்பாலானோர் பொறியியல், பல்தொழில்நுட்பம்,கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்து மற்றும் அந்தந்த துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.இங்குள்ள மக்கள் சிலர் சுயதொழில் புரிவோராகவும் இன்னும் சிலர் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். பீடி சுற்றும் தொழில் இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் பணிபுரியும் தொழிலாக உள்ளது.
 
விவசாயம் மற்றும் உணவு விவசாயம் இவ்வூர் மக்களின் பிரதான தொழிலாக உள்ளது.ஊரில் பெரும்பான்மையானோர் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ளனர்.விவசாயம் மூலமாக பிச்சி பூக்கள், தென்னை,வாழை,கீரை முதலியன விளைவிக்கப்படுகின்றன.மீன் இப்பகுதி மக்களின் அன்றாட உணவாக உள்ளது.
 
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கன்னங்குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது