கோதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 52:
 
பயிர்ச்சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமான உரப்பயன்பாடு ஆகியன காரணமாக ஓரலகுப் பரப்பிலிருந்து அறுவடை செய்யக்கூடிய கோதுமையின் அளவு அதிகரித்தது. சூடடிப்பு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் போன்ற புதிய இயந்திரங்களின் வருகையும், புதிய கோதுமை ரகங்களின் கண்டுபிடிப்பும் கோதுமைப் பயிர்ச்செய்கையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காக்களில் புதிய விளைநிலங்களில் கோதுமைப் பயிரிடலோடு கோதுமை உற்பத்தியும் விரிவடைந்துள்ளது.
 
==கோதுமையின் போசாக்குத் தகவல்கள்==
 
கோதுமை {{convert|240000000|ha|acre|lk=on}} பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இது ஏனைய எந்தப் பயிருக்கான பயிரிடல் பரப்பளவிலும் அதிகமாகும். உலகின் மிக விரும்பப்படும் நிறையுணவுகள் அரிசியும் கோதுமையுமேயாகும். ஏனைய எந்த உணவுப் பொருள்களிலும் பார்க்க அதிக போசணையை கோதுமை மனிதனுக்கு வழங்குகிறது. கோதுமை ஆர்ட்டிக் பகுதிகளிலிருந்து மத்தியகோட்டுப் பகுதிகள் வரையிலும், கடல் மட்டத்து நிலங்கள் முதல் கடல் மட்டத்திலிருந்து {{convert|4000|m|ft|abbr=on}} உயரமுள்ள திபத் மேட்டுநிலங்கள் வரையிலும் பயிரிடக்கூடியதாக உள்ளதால் இது உலகளவில் ஒரு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. இது தவிர, கோதுமையைக் களஞ்சியப் படுத்தலும், மாவாக்கலும் இலகுவானதாகும். மேலும் இதிலிருந்து உண்ணத்தக்க, சுவையான பல்வேறு உணவுப்பொருட்களையும் ஆக்கமுடியும். பெரும்பாலான நாடுகளில் மாப்பொருளின் முக்கிய ஆதாரமாகக் கோதுமை விளங்குகிறது.{{Citation needed|date=December 2012}}
 
கோதுமைப் புரதம் மாவடிவில் உள்ளதால் 99%மான மனிதர்களால் இலகுவாகச் சமிபாடடையச் செய்ய முடியும்.{{Citation needed|date=December 2012}} மேலும் கோதுமையில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் கொழுப்பு ஆகியன உள்ளன. கோதுமை உணவுகள் மிகவும் சத்து மிக்கன.<ref>http://bs-agro.com/index.php/news/other-countries/6512-u-s-australia-india-partnership-to-develop-climate-resilient-varieties-of-rice-and-wheat</ref>
 
கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை என்பன இரு முக்கியமான வகைகளாகும். ஆயினும், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாக, எத்தியோப்பிய உயர்நிலங்களில் விளையும் ஊதாக் கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்பு, மஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற சத்துமிக்க ஆயினும் வர்த்தக ரீதியாகப் பயிரிடப்படாத கோதுமை வகைகளும் உள்ளன.<ref name=WheatBread/><ref>{{cite book|title=Nuts and seeds in health and disease prevention|authors=Victor Preedy et al.|isbn=978-0-12-375688-6|pages=960–967|year=2011|publisher=Academic Press}}</ref><ref>{{cite journal|title=Comparison of Antioxidant Activities of Different Colored Wheat Grains and Analysis of Phenolic Compounds|author=Qin Liu et al|journal=Journal of Agricultural and Food Chemistry|volume=58|issue=16|year=2010|pages=9235–9241|doi=10.1021/jf101700s|url=http://pubs.acs.org/doi/abs/10.1021/jf101700s}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோதுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது