கோதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 103:
 
கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை என்பன இரு முக்கியமான வகைகளாகும். ஆயினும், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாக, எத்தியோப்பிய உயர்நிலங்களில் விளையும் ஊதாக் கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்பு, மஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற சத்துமிக்க ஆயினும் வர்த்தக ரீதியாகப் பயிரிடப்படாத கோதுமை வகைகளும் உள்ளன.<ref name=WheatBread/><ref>{{cite book|title=Nuts and seeds in health and disease prevention|authors=Victor Preedy et al.|isbn=978-0-12-375688-6|pages=960–967|year=2011|publisher=Academic Press}}</ref><ref>{{cite journal|title=Comparison of Antioxidant Activities of Different Colored Wheat Grains and Analysis of Phenolic Compounds|author=Qin Liu et al|journal=Journal of Agricultural and Food Chemistry|volume=58|issue=16|year=2010|pages=9235–9241|doi=10.1021/jf101700s|url=http://pubs.acs.org/doi/abs/10.1021/jf101700s}}</ref>
 
===பயிரிடல் முறைமைகள்===
[[File:Woman harvesting wheat, Raisen district, Madhya Pradesh, India ggia version.jpg|thumb|கோதுமை அறுவடை செய்யும் பெண், ரைசன் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா]]
 
இந்திய மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிகளிலும் வடக்குச் சீனப் பகுதிகளிலும் சிறப்பான நீர்ப்பாசன வசதிகளால் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களில் உரப்பயன்பாட்டின் வளர்ச்சியும் புதிய கோதுமை வகைகளின் கண்டுபிடிப்பும் எக்டேயரொன்றுக்கான அறுவடை அளவை அதிகமாக்கியுள்ளன. அபிவிருத்தியடந்துவரும் நாடுகளில் இக்காலப் பகுதியில் உரப்பயன்பாட்டின் அளவு 25 மடங்காக அதிகரித்துள்ளது. எனினும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதில் உரப்பயன்பாடு மற்றும் புதிய வகை விதைகள் என்பவற்றிலும் பார்க்க பயிரிடல் முறைமைகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. இதற்கு உதாரணமாக ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகளில் நடைபெறும் கோதுமை வேளாண்மையைக் குறிப்பிடலாம். இங்கு மழைவீழ்ச்சி குறைவாயிருந்தாலும், சிறிதளவு நைதரசன் உரப் பயன்பாட்டுடன் வெற்றிகரமான அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. அவரைக் குடும்பத் தாவரங்களைச் 'சுழற்சிமுறை'ப் பயிர்களாகப் பயன்படுத்தியமையே இவ் வெற்றிக்குக் காரணமாகும். மேலும், சென்ற பதிற்றாண்டில், கனோலா வகைத் தாவரத்தை சுழற்சிமுறைப் பயிராகப் பயன்படுத்தியதின் விளைவாக கோதுமை விளைச்சல் 25% அதிகரித்துள்ளது.<ref>Swaminathan MS (2004) [http://www.cropscience.org.au/icsc2004/plenary/0/2159_swaminathan.htm Stocktake on cropping and crop science for a diverse planet]</ref> மழைவீழ்ச்சி குறைந்த இப்பிரதேசங்களில் அறுவடையின் பின் அடிக்கட்டைகளை அகற்றாது விடுவதன் மூலமும் நிலம் பண்படுத்தலைக் குறைப்பதன்மூலமும் நிலத்தடி நீர் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. (மேலும் மண்ணரிப்பும் தடுக்கப்படுகிறது)<ref>[http://www.grainscouncil.com/EMS/06_Nov_02_Production_Farming_Practices.pdf Umbers, Alan (2006, Grains Council of Australia Limited) Grains Industry trends in Production - Results from Today’s Farming Practices]</ref>
 
2009ல், மிகச்சிறந்த உற்பத்தியுடைய நாடாக பிரான்சு உள்ளது. இதன் உற்பத்தித் திறன் எக்டேயருக்கு 7.45 மெற்றிக் தொன்னாகும். 2009ல் அதிக கோதுமை உற்பத்தியுடைய நாடுகளாக சீனா (115 மில்லியன் மெற்றிக் தொன்கள்), இந்தியா (81 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ரசியா (62 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ஐக்கிய அமெரிக்கா (60 மில்லியன் மெற்றிக் தொன்கள்) மற்றும் பிரான்சு (38 மில்லியன் மெற்றிக் தொன்கள்) என்பன திகழ்கின்றன.<ref name=OSU2009/>
 
எனினும், இந்நாடுகளில் குறிப்பிடத்தக்களவான அறுவடைக்குப் பின்னான இழப்புகள் நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பயிரிடல் முறைமை தொடர்பான தொழில்நுட்ப அறிவின்மையேயாகும். இதற்கு மேலதிகமாக, மோசமான வீதியமைப்பு, போதுமான களஞ்சியப்படுத்தல் வசதியின்மை, வழங்கல் தொடர்புகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதியின்மை போன்றனவும் காரணங்களாக உள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, கோதுமை உற்பத்தியில் 10% பயிர்நிலங்களில் இழக்கப்படுகின்றன. மேலும் 10% மோசமான களஞ்சியப்படுத்தல் மற்றும் வீதியமைப்புக்களினால் வீணாகின்றன. மேலும் சிறுபகுதி சில்லறைச் சந்தைகளில் இழக்கப்படுகின்றது. சிறந்த உட்கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சில்லறை வலையமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியன மேற்கொள்ளப்பட்டால் 70இலிருந்து 100 மில்லியன் மக்களுக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான உணவை இந்தியாவிலிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும் என ஆய்வொன்று தெரிவிக்கிறது.<ref>{{cite journal|title=Economic Analysis of Post-harvest Losses in Food Grains in India: A Case Study of Karnataka|author=H. Basavaraja et al.|journal=Agricultural Economics Research Review|volume=20|pages=117–126|url=http://ageconsearch.umn.edu/bitstream/47429/2/8.pdf}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோதுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது