நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
வானவர் தலைவன் இந்திரன் கொடையாளி. ஆபுத்திரன் கொடையால் இந்திரனின் பாண்டுகம்பளம் (அரியணை) ஆட்டம் கண்டது. ஆபுத்திரனை ஒடுக்க எண்ணினான். அந்தணன் உருவில் ஆபுத்திரனிடம் வந்து வரம் தருவதாகச் சொன்னான். ஆபுத்திரன் தன்னிடம் உள்ள கடிஞை போதும் என்றான். வஞ்சக இந்திரன் அந்தக் கடிஞை பயன்ற்றுப் போகும்படி நாடும் மக்களும் 12 ஆண்டுகள் பசியின்றி வளத்துடன் வாழத் தானே வரம் தந்துவிட்டுச் சென்றான். ஆபுத்திரனிடம் உணவு பெறுபவர் யாரும் இல்லாததால் கடிஞை செயலற்றுப் போயிற்று.
 
ஆபுத்திரன் ஊர் ஊராகச் சென்றான். அப்போது வங்கக்கப்பலிலிருந்து இறங்கிய சிலர் [[சாவகம் (தீவு)|'''சாவகத் தீவு''']] மக்கள் பசியால் வாடுவதாக்க் கூறினர். சாவகத் தீவுக்கு வங்கத்தில் சென்னறான். இடையில் புயல். இதை என்னும் பாய்மரப் பாய் கிழிந்துவிட்டது. நாய்கர் (மாலுமிகள்) மணிபல்லவத் தீவில் இறங்கிச் சரிசெய்துகொண்டிருந்தனர்.
 
ஆபுத்திரன் அங்கு இறங்கி பசித்தோரைத் தேடிக்கொண்டிருந்தான். ஆபுத்திரன் வங்கத்தில் இருப்பதாக எண்ணிய நாய்கன் வங்கத்தை ஓட்டிச்சென்றுவிட்டான். '''மணிபல்லவத் தீவில் மக்களே இல்லை'''நயினாதீவு. கடவுள் கடிஞையைக் கொண்டு தன் பசியை மட்டும் நீக்கிக்கொண்டு உயிர்வாழ ஆபுத்திரன் விரும்பவில்லை. ‘ஆண்டுக்கு ஒருமுறை புத்தன் பிறந்த நாளில் தோன்றி வழங்குவோர் கையில் சேர்க’ என்று கூறி, அத்தீவிலிருந்த கோமுகி (ஆ முகம், பசு முகம் தோற்றம் கொண்ட பொய்கை) என்னும் பொய்கையில் எறிந்துவிட்டு உண்ணாதிருந்து உயிர்விட்டான்.
 
இந்த அமுதசுரபி பின்னர் மணிமேகலை கைக்கு வந்தது. அவள் பசிப்பிணியைப் போக்கிவந்தாள்.
பாம்பு-கருடன் போராட்டத்தின் விளைவாகவே தமிழகத்து மாசாத்துவான் வணிகர் ஒருவரால் நயினைக் கோயில் அமைக்கப்பட்டது காவிரிப்பட்டிணத்தில் வாழ்ந்து வந்த மாசாத்துவன் என்னும் வணிகன் என்பது செவிவழிக் கதை. பாம்பு சுற்றிக் கல்லையும், கருடன் கல்லையும் கோவிலையும் இன்று அடியார்கள் தரிசிக்கின்றனர். இன்றும் அக்கற்களையும், கோவிலையும் அடியார்கள் தரிசிப்பது உண்மையாதலால், பாம்பும் கருடனும் முன்னர் தமக்குள் போராடியதாகக் கூறப்படும் கதையும் உண்மையாகிவிட முடியாதுஉண்மை.
 
வரலாற்றுத்துறை அறிஞர்கள் (பல சிங்களவர்கள் உட்பட) தமது ஆய்வுகளின் அடிப்படையில் ‘புத்தர் இலங்கைக்கு வந்தார் என்பது வெறும் கட்டுக்கதை’ என்ற கூறியிருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. கலாநிதி ஜீ.சீ.மெண்டிஸ் போன்ற சிங்கள அறிஞர்கள் உட்பட்ட பல வரலாற்றுத்துறை அறிஞர்கள், ‘புத்தர் இலங்கைக்கு வந்தார்’ என்பது ‘இயேசுக் கிறீஸ்து லண்டனுக்கு போனார்’ என்பது போன்றதொரு கட்டுக்கதை என்று கருத்து வெளியிட்டுள்ளமையும் இங்கு மனங்கொள்ளத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/நயினாதீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது