தொற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 13:
பல தொற்றுநோய்கள் [[நோய்க்காவி|நோய்க்காவியினாலும்]] கடத்தப்படுகின்றது. இந்தக் கடத்தலின்போது, நோய்க்காரணியானது காவியின் உடலினுள் உட்செல்லாமல், காவியின் வெளியுடலில் ஒட்டிக்கொண்டு சென்று கடத்தப்படுமாயின் அதை பொறிமுறைக் கடத்தல் (mechanical) என்று அழைக்கலாம். உதாரணமாக ஈயானது மாட்டுச்சாணத்தில் உட்காரும்போது, அதன் உடலில் [[நோய்க்காரணி|நோய்க்காரணிகள்]] ஒட்டிக்கொண்டு சென்று, மீண்டும் அவை உணவுப் பொருட்களின் மேல் உட்காரும்போது, உணவுப் பொருளை அசுத்தமடையச் செய்கின்றது. இதனால், அந்த உணவை உட்கொள்ளும் உயிரினத்திற்கு [[நோய்க்காரணி]] கடத்தப்பட்டு, அங்கு நோயை ஏற்படுத்துகின்றது. மாறாக உயிரியல் [[நோய்க்காவி|நோய்க்காவிகள்]] எனப்படுபவை இயக்க நிலையிலிருந்து, [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]] தன் உடலினுள்ளே எடுத்துச் சென்று, வேறொரு உயிரினத்தினுள் செலுத்தி, அங்கே [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]] கடத்துகிறது. உதாரணமாக, நுளம்பானது ஒருவரிலிருந்து தான் பெறும் குருதியில் இருக்கும் [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]], வேறொரு நபரை கடிக்கும்போது, அவரது உடலினுள் செலுத்துவதன் மூலம் கடத்துகிறது. பொதுவாக தீவிரமான குருதியிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களான [[மலேரியா]], [[யானைக்கால்]] [[நோய்]] போன்றவை இப்படியான காவிகளாலேயே ஏற்படுகின்றது. வேறு [[உயிரினம்|உயிரினங்களும்]] [[உயிரியல்]] [[நோய்க்காவி|நோய்க்காவிகளாக]] இருக்கின்றதாயினும், பொதுவானவை நுளம்பு, ஈ, தெள்ளு, பேன் போன்ற ஆத்ரோபோடா வகையைச் சார்ந்த [[உயிரினம்|உயிரினங்களாகும்]]. இப்படியான [[நோய்க்காவி|நோய்க்காவிகள்]] [[நோய்க்காரணி|நோய்க்காரணியின்]] வாழ்க்கைவட்டத்தின் குறிப்பிட்ட நிலைக்கு அவசியமாக இருப்பதனால், [[நோய்க்காவி|நோய்க்காவியை]] அழிப்பதன்மூலம் நோய்க்கடத்தலையும், நோய்பரவலையும் தடுக்கலாம்.
 
'''தடித்த எழுத்துக்கள்'''== நோய்க்கடத்தலை தடுத்தல் ==
நோய்க்கடத்தலை தடுப்பதற்கு, ஒவ்வொரு நோயையும் உருவாக்கும் [[உயிரினம்]] பற்றி, [[நோய்|நோயின்]] இயல்புபற்றி, [[நோய்]] கடத்தப்படும் முறைபற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான இயல்புகளாவன, [[நோய்க்காரணி|நோய்க்காரணியின்]] நோய்த்தொற்று வீரியம் (virulence), நோய்ப் பாதிப்புக்கு உட்பட்டிருப்பவர் செல்லும் தூரம், நோய்த் தொற்றின் நிலை என்பனவாகும்.
 
வரிசை 20:
அதேநேரம் வீரியம் கூடிய, மிக விரைவாக தாக்கப்பட்டவரின் உடல் தொழிலியல்களை பாதிக்கக்கூடிய [[நோய்க்காரணி|நோய்க்காரணியின்]] தாக்கத்திற்குட்படும் ஒருவர் மிக விரைவில் இறப்பதனால், அவர் அதிக தூரம் பயணம் செய்ய முடியாமல் போவதனால், [[நோய்]] விரைவாகப் பரவினாலும், ஒரு குறுகிய பிரதேசத்தினுள் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இப்படிப்பட்ட நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் பரவலை தடுக்க முடியும்.
 
சிலநோய்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அதிகமாக இருக்குமாயின், அவ்விடங்களில் வசிப்பவர்கள் எளிதில் அந்நோய்க்கு ஆளாகும் பண்பை (susceptibility) கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உரிய [[தடுப்பூசி]] முறைகள் (vaccination programs), தொற்றுநீக்கிகளின் (use of disinfectants) பாவனை, [[நோய்க்காவி|நோய்க்காவியை]] (vectors) அழித்தல் போன்ற முறைகளால் கட்டுப்படுத்தலாம்.
 
== கொள்ளைநோய் (epidemic), உலகம்பரவுநோய் (pandemic) ==
ஒரு தொற்று நோயானது புதிதான ஒரு [[நோய்க்காரணி|நோய்க்காரணியாலோ]], அல்லது ஏற்கனவே அறியப்பட்டிருந்தும்கூட, பாவிக்கப்படும் மருத்துவ முறைகளை எதிர்க்கவல்ல புதிதான ஒரு நிலையைப் பெற்றிருக்கும் ஒரு [[நோய்க்காரணி|நோய்க்காரணியாலோ]] ஏற்படும்போது மிக விரைவில் பரவும் வல்லமை உள்ளதாய் இருக்கிறது. அப்படி ஒரு தொற்றுநோய் பரவும்போது, பல இறப்புக்களை ஏற்படுத்தவல்ல, அபாயகரமான கட்டத்தை அடையும் சாத்தியம் அதிகரிக்கும். இவ்வாறான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய முறையில் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டு, தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/தொற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது