பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →கிடைப்பருமை: *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →சில முக்கிய கருதுகோள்கள்: *விரிவாக்கம்* |
||
வரிசை 27:
==சில முக்கிய கருதுகோள்கள்==
[[File:Ballard Farmers' Market - vegetables.jpg|thumb|300px|பொருளியலாளர்கள் ஒரு சந்தையில் எவ்வாறு மக்கள் முடிவெடுக்கின்றனர் என ஆராய்கின்றனர்.|alt=A vegetable vendor in a marketplace.]]
சில பொதுவான எடுகோள்கள்:
* அனைத்து மாந்தரும் தங்கள் விருப்பத்தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும்.
* ஒரு பண்டத்தின் விலை அதற்கு ஒருவர் கொடுக்கத்தயாராக உள்ள பணமாகும்.
* ஒரு பண்டத்தைப் பெற ஒருவர் பணம் அல்லது மாற்றுப் பண்டத்தை தர முனையும்போது அவற்றால் அவர் பெறக்கூடிய மாற்றுத் தேவைகளை இழக்கிறார். எனவே ஒரு பண்டத்தின் உண்மையான விலை அதைப் பெற ஒருவர் இழக்கும் பண்டத்தின் மதிப்பாகும். இது [[சந்தர்ப்பச்செலவு]] எனப்படும்.
* ஊக்கத்தொகைகளுக்கு மாந்தர் எதிர்வினை யாற்றுகின்றனர். ஒரு கவர்ச்சிகரமானத் திட்டம் கூடுதல் மக்களை வாங்கச் செய்யும்.
* பொருளியல் வாழ்விற்கான சரியான அமைப்பாக சந்தைகள் விளங்குகின்றன. அனைவரும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற முயன்றால் [[ஆடம் சிமித்]] கொள்கைப்படி, சந்தையின் “புலனாகா கை” அனைவரும் நலனுடன் இருக்குமாறு வைத்திருக்கும்.
* சிலநேரங்களில் விலைகள் குமுகத்திற்கு ஏற்படுத்தும் நன்மை/தீமைகளை காட்டுவதில்லை. காட்டாக, காற்று மாசடைதல் குமுகத்திற்கு தீமையும் கல்வி குமுகத்திற்கு நன்மையும் விளைவிக்கின்றன. குமுகத்திற்கு தீமை விளைவிக்கும் பண்டங்கள்/சேவைகளுக்கு அரசு கூடுதல் வரி விதித்து விற்பனையைக் கட்டுப்படுத்தலாம்.அதேபோல நன்மை பயக்கும் விற்பனையை ஆதரிக்கலாம்.
* ஒரு நாட்டின் வாழும் தரம் அந்நாட்டு மக்கள் உற்பத்தி செய்யும் அல்லது சேவைகளை வழங்கும் திறன்களைப் பொறுத்து உள்ளது. உற்பத்தி திறன் என்பது மொத்தம் உற்பத்தியான பண்டங்களை அதை உற்பத்தி செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுத்து கிடைப்பதாகும்.
* மொத்த பண நிரம்பல் கூடுதலாகும்போது அல்லது உற்பத்திச் செலவு கூடும்போது விலைகள் ஏறுகின்றன. இது [[பணவீக்கம்]] எனப்படுகிறது.
===மதிப்பு===
மதிப்பு என்பதை ஒரு மனிதத்தேவையை நிறைவு செய்ய ஒருவர் கொடுப்பதற்கு தயாராக உள்ள செலவு ஆகும். ஒரு பண்டத்தின் மதிப்பு சார்புத் தன்மை உடையது. இது காலம், இடம், மற்றும் பொருள்களுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.
|