விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎கலந்து கொள்வோர்: *விரிவாக்கம்*
வரிசை 227:
 
::நக்கீரரே தங்களுடைய கையேடு யோசனை மிகவும் அருமை. விக்கிப்பீடியாவைப் பற்றி தேனியார் எழுதிவரும் தொடர் எளிமையாக உள்ளது. அதனில் கட்டுரையை தொகுப்பது, விக்கிப்பீடியாவின் படிமம் ஏற்றுதல், கட்டுரைத் திருத்தம் போன்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். தேனியார் முடிவெடுக்க வேண்டும். --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 14:03, 4 சூலை 2013 (UTC)
 
:: நூல் ஒன்று வெளியிடுவது நல்ல யோசனைதான். பத்தாண்டு நிறைவின் ஒரு நினைவாகவும் இது அமையும். எனக்கும் நற்கீரனுடைய யோசனையே கூடிய ஏற்புடையதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாவை எப்படித் தொகுப்பது, எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களையும், விக்கிப்பீடியாத் திட்டத்தின் உலகளாவிய முக்கியத்துவம், தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் என்பவற்றையும் உள்ளடக்கிய சிறு நூலாக இது அமையலாம். அச்சில் வெளியிடுவதைவிட இது இலகுவாகவும் செலவு குறைவாகவும் இருக்குமானால் சிறப்புக் கட்டுரைகளை குறுவட்டில் படியெடுத்து ஒரு இணைப்பாக அக் கையேட்டுடன் சேர்த்து வழங்கலாம். பொறுப்புக்களைப் பகிர்ந்து செய்யக்கூடியதாக இருந்தால்தான் இத்தகைய வேலைகளைச் செய்ய முடியும். நிகழ்வுக்கு முதல் நாள் இரவுவரை அச்சகத்தில் இருக்கும் நிலை இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ---[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 17:57, 4 சூலை 2013 (UTC)
 
== மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தல் ==
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்".