விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 240:
#. விக்கிச் செய்தி தொடர்பிலான சவால்களும் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய அணுகுமுறைகளும்.--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|பேச்சு]]) 22:46, 1 சூலை 2013 (UTC) \--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|பேச்சு]]) 05:56, 2 சூலை 2013 (UTC)
::வழக்கமான மாநாடு என்ற பெயரில் நடத்தினால், கட்டுரை, ஆய்வு என்பது போன்ற குழப்பம் வருகிறது என்று தான் கூடல் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். நிகழ்வின் முதல் நாள் நிகழ்வு அரங்குக்கு வெளியே பண்பாட்டுச் சுற்றுலாவாக நடக்க வாய்ப்புண்டு. அரங்கில் அமர்ந்து விக்கிப்பீடியா நுட்பங்கள் குறித்து பேசுவதற்கு இருக்கும் ஒரே நேரம் இரண்டாம் நாள் காலை மட்டுமே. கலந்து கொள்ளும் பலரும் புதிய விக்கிப்பீடியா நுட்பங்கள், வழிகாட்டல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றுள்ளார்கள். எனவே, அந்த நோக்கில் சில அமர்வுகளை ஒழுங்குபடுத்த இயலும். இது unconference போல அமைவது சிறப்பாக இருக்கும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 13:15, 4 சூலை 2013 (UTC)
 
: கட்டுரை, ஆய்வு போன்றவற்றை விடக் கூடலில் கலந்து கொள்வோர் ஒரு முறைசாராத சூழலில் தமது கருத்துக்களைப் பகிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது நல்லது. விக்கிப்பீடியாவின் அடிப்படைகள் தொடர்பில் ஓரிருவர் முதலில் விளக்கம் அளிக்கலாம். என்னென்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று பயனர்களிடையே ஒரு இணக்கப்பாட்டை முதலிலேயே ஏற்படுத்திக்கொண்டால் கலந்து கொள்ளும் பயனர்கள் முன்னரே இவ்விடயங்கள் பற்றிச் சிந்தித்து ஆயத்தமாக வரமுடியும். இதனால், கூடிய அளவு பயனர்கள் பயனுள்ள வகையில் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். பயனர்கள் அறிந்து கொள்ள விரும்பும் விடயங்கள் தொடர்பில் கூடிய புலமை உள்ளவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் இருந்தாலும் அத்தகையவர்களை இனங்கண்டு அழைப்பதும் பயனுள்ளதாக அமையக்கூடும். குறிப்பாக சில மலையாள விக்கிப்பீடியர்கள் இந்த வகையில் உதவக்கூடும். தொடக்கத்தில் பயனர்கள் எல்லோரும் தங்களை முறையாக ஏனையோருக்குச் சுருக்கமாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கினால் நல்லது. பண்பாட்டுச் சுற்றுலாவின் போதுகூட இதைச் செய்யலாம். ---[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 04:25, 5 சூலை 2013 (UTC)
 
==சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பு உண்டா?==
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்".