துரோணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 3:
==பிறப்பு==
 
[[பரத்துவாசர்]] தனது தவ வலிமையால் உலகமெங்கும் பயணித்து வரும் போது '''க்ருடசி''' என்ற கந்தர்வ கண்ணியை கண்டார். கண்டவுடன் அவள் மீது காதல் கொண்டார். அந்த கந்தர்வ கண்ணியை கண்டு காதல் கொண்ட மாத்திரத்திலேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட விந்துவை ஒரு பானையில் செலுத்தினார். பானையில் இருந்து பிறந்தார் [[துரோணர்]].<ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
==துரோணரின் சபதம்==
 
[[துரோணர்]] பரம ஏழை. அவர் வீட்டில் ஒரு பசு மாடுகூட இல்லை. பாலையே ருசி பார்க்காமல் வளர்ந்தார் மகன் [[அசுவத்தாமன்]]. கஞ்சிக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்ந்தார் [[அசுவத்தாமன்]]. [[துரோணர்|துரோணரின்]] இளமைக் கால நண்பர் பாஞ்சால நாட்டு அரசர் [[துருபதன்|துருபதனிடம்]] போய் ஒரு பசுவை வாங்கி வருமாறு [[கிருபி]] [[துரோணர்|துரோணரை]] நச்சரித்தாள். "சிறுவயதில் தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்து கொள்வதாக அவன் சொல்லியிருக்கிறான்" எனக் கூறி [[துருபதன்|துருபதனிடம்]] சென்று தனது சிறு வயது வாக்குறுதியை நினைவூட்டினார். [[துருபதன்]] வாய்விட்டுச் சிரித்தான். "சமமானவர்களுடன் தான் நட்பு வைத்துக்கொள்ள முடியும். நான் செல்வம் மிகுந்த மன்னன் நீயோ ஏழை முனிவன் நாம் நண்பர்களாக இருக்க முடியாது. நட்பின் அடிப்படையில் பசுவைக் கேட்காதே. தர்மமாக கேள் பசுவை தானமாக தருகிறேன்" என்றார் [[துருபதன்]]. இதைக் கேட்டதும் [[துரோணர்]] வருத்தமும், கோபமும் கொண்டார். "ஒரு நாள் உனக்கு இணையாக மன்னனாகி மீண்டும் வருவேன்" என்று சபதம் செய்து பாஞ்சாலத்தை விட்டு வெளியேறினர்.<ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
==ஆசான் துரோணர்==
 
போர் வித்தையில் தேர்ந்த ஆசிரியரான [[பரசுராமர்|பரசுராமனிடம்]] போய் போர்த் தந்தரங்களைக் கற்றார். என்னுடைய வித்தையை சத்திரியர்களுடன் பகிர்ந்துகொண்டுவிடாதே என எச்சரித்தார் [[பரசுராமர்]]. மாட்டேன் என வாக்குறுதி தந்தார் [[துரோணர்]]. ஆனால் [[பரசுராமர்|பரசுராமர்]] ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததுமே வாக்குறுதியை மறந்து [[அத்தினாபுரம்]] சென்று குரு வம்சத்திற்கு ஆசானாகி குரு வம்ச சத்திரிய இளைஞர்களை [[துருபதன்|துருபதனுக்கு]] எதிராகப் பயன்படுத்தத் திட்டமிட்டார்.<ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
[[துரோணர்]] [[அத்தினாபுரம்]] வந்த போது குரு வம்சத்துப் பிள்ளைகள் கிணற்றிலிருந்து ஒரு பந்தை மீட்பதில் மும்மரமாக இருந்தனர். இராச குமாரர்களுக்கு உதவ நினைத்தார் [[துரோணர்]]. நீண்ட ஒரு புல்லை எடுத்து கிணற்றில் இருந்த பந்தின் மீது வீசினார். இது பந்தைத் துளைத்து ஒட்டிக்கொண்டது. அடுத்தப் புல்லை எடுத்து ஏற்கனவே பந்தின் மீது ஒட்டியிருந்த புல்லின் மீது வீசினார் புல்லின் மேல் நுனியோடு சேர்ந்து ஒட்டிக்கோண்டது. இப்படியே அடுத்து அடுத்து எடுத்து வீச ஒரு சங்கிலித் தொடரைப் போல கோர்த்துக் கொண்டதும் புல்லை மெதுவாக மேலே இழுத்தார்; பந்து மேலே வந்தது. [[துரோணர்]] அடுத்து தன் மோதிரத்தை எடுத்து கிணற்றில் வீசினார். அம்பை எடுத்து வில்லில் பூட்டி எய்தார். அம்பு பாய்ந்து சென்று மோதிரத்தை சேர்த்து எடுத்துக்கொண்டு மேலே வந்தது. இந்த அதிசயத்தைக் கண்டு திகைத்துப் போன அரச குமாரர்கள் [[பீஷ்மர்|பீஷ்மரிடம்]] சென்று நடந்ததை கூறினார்கள்.
 
[[துரோணர்|துரோணரை]] அழைத்து அரச குமாரர்களுக்கு ஆசானாக நியமித்தார் [[பீஷ்மர்]]. ஆனால் [[துரோணர்]] அரச குமார்ர்களுக்குகுமாரர்களுக்கு ஓர் நிபந்தனை விதித்தார். "எனக்கு குரு தட்சணையாக பாஞ்சால மன்னன் [[துருபதன்|துருபதனை]] உயிரோடு பிடித்துவந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும்". "அப்படியே ஆகட்டும்" என ஒப்புக்கொண்டனர் அரச குமாரர்கள். [[கௌரவர்|கௌரவர்களையும்]],[[பாண்டவர்|பாண்டவர்களையும்]] [[துரோணர்]] சீடர்களாக எற்றுக்கொண்டார். வெகு சீக்கிரத்திலேயே [[யுதிஷ்டிரன்]] ஈட்டி எறிவதிலும், [[அரிச்சுணன்]] வில் வித்தையிலும், [[பீமன்|பீமனும்]], [[துரியோதனன்|துரியோதனனும்]],[[துச்சாதனன்|துச்சாதன்னும்]] கதை சுழற்றுவதிலும், [[நகுலன்]],[[சகாதேவன்]] இருவரும் வாள் வீச்சிலும் தேர்ந்தனர்.
 
===குரு தட்சணை===
 
[[கௌரவர்|கௌரவர்களும்]],[[பாண்டவர்|பாண்டவர்களும்]] போர்க்கலையில் தேர்ச்சி பெற்றனர். [[துரோணர்|துரோணருக்கு]] குரு தட்சணை கொடுக்க வேண்டிய தருணம் வந்தது. அவர்கள் பாஞ்சாலத்துக்குள் புகுந்து [[துருபதன்|துருபதனின்]] பசுக்களை எல்லாம் வெளியே விரட்டிவிட்டு [[துருபதன்|துருபதனைப்]] போருக்கு அழைத்தனர். பசுக்களை மீட்க [[துருபதன்]] வெளியே வந்ததும்,"நம் ஆசான் [[துருபதன்|துருபதனை]] உயிரோடு பிடித்துக்கொண்டு வர பணித்திருப்பதால் அவனது படைகளுடன் போரிட்டு நாம் களைப்படைந்து விடுவோம் "என்று [[அரிச்சுனன்]] சொன்னதை [[பாண்டவர்|பாண்டவர்கள்]] ஏற்றனர். [[கௌரவர்|கௌரவர்கள்]] எப்போதுமே [[பாண்டவர்|பாண்டவர்களுடன்]] ஒத்துப் போகாதவர்கள் [[துருபதன்|துருபதனின்]] படைகளை எதிர்த்து போரிட்டார்கள். [[அரிச்சுனன்]] தேரில் ஏறிக்கொண்டு தர்மரிடம்[[தருமர்|தருமரிடம்]] "நீங்கள் குருநாதரிடம் செல்லுங்கள். நாங்கள் நால்வரும் [[துருபதன்|துருபதனை]] பித்துக்கொண்டு வருகிறோம்" என்றான். [[பீமன்]] கதையைச் சுழற்றிக்கொண்டு [[துருபதன்|துருபதனை]] நோக்கி முன்னேறினான். அரிச்சுன்னின்[[அருச்சுணன்|அருச்சுணனின்]] தேர்ச் சக்கரங்களைப் பாதுகாத்தபடி [[நகுலன்|நகுலனும்]],[[சகாதேவன்|சகாதேவனும்]] சென்றனர். [[கௌரவர்|கௌரவர்களால்]] கவனம் சிதறிய [[துருபதன்]] அடுத்து யோசிப்பதற்குள் [[அரிச்சுனன்]] அவன் மீது பாய்ந்து தரையோடு அழுத்திப் பிடித்துக் கொண்டான். [[பீமன்]] கயிற்றால் கட்டி தேரில் ஏற்றினான். அவமானத்தால் குன்றியிருந்த [[துருபதன்|துருபதனை]] [[துரோணர்|துரோணரின்]] முன் நிறுத்தினர். தன் முன்னே நின்ற [[துருபதன்|துருபதனைப்]] பார்த்து "உன் நாட்டில் பாதியை என் சீடர்களுக்குத் தந்தால் உன்னை விடுவிப்பார்கள்" என்றார் [[துரோணர்]]. [[துருபதன்]] அதற்கு சம்மதித்தான். "அப்படியானால் பாஞ்சாலத்தில் கங்கையாற்றின் வட பகுதியை கேட்கிறார்கள். உனது ஆட்சி கங்கையின் தெற்கு பகுதியில் மட்டும்தான் என்றார் [[துரோணர்]]. <ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
===நண்பர்கள்===
[[துருபதன்|துருபதனிடம்]] பெற்ற பாஞ்சாலத்தின் வட பகுதியை [[துரோணர்|துரோணருக்கு]] குரு தட்சணையாக கொடுத்தனர். அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அங்கு நின்ற [[துருபதன்|துருபதனிடம்]] நான் இப்போது பாஞ்சாலத்தின் ஒரு பாதி நாட்டுக்கு மன்னன், நீ மீதிப் பாதி நாட்டுக்கு மன்னன், நாம் இருவரும் இப்போது சமம், இனி நாம் நண்பர்களாக இருப்போமா"? என்றார். மனதுக்குள் பழி வாங்கும் எண்ணம் இருந்தாலும் [[துருபதன்]] அதை ஏற்று சம்மதம் தெரிவித்தான்.<ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/துரோணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது