"நாதமுனிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:நாதமுனிகள்.jpg|thumb|250px|நாதமுனிகள்]]
 
வைணவ பெரியோர்கள் (ஆசாரியர்கள் பரம்பரை) வரிசையில் முதன்மையானவரான '''நாதமுனிகள்''' பத்தாம் நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்த ஒரு ‌வைணவப் பெரியார்.கிபி இவர்824ம் இன்றையவருடத்தில் [[கடலூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள வீரநாராயணபுரம் எனும் இன்றைய [[காட்டுமன்னார்கோயில்]] பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் ரங்கநாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர்.
 
ஒரு முறை ‌கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் ([[நம்மாழ்வார்]]) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை வீரநாராயணபுரம் பெருமாள் முன்பு பாடியது கேட்டது முதல் மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரிக்கு வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற [[ஆழ்வார்கள்]] ‌அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தமாக]] நாதமுனிகள் தொகுத்தார்.
 
நாதமுனிகள் தொகுத்த இத்திவ்யப் பிரபந்தமே உலகின் அனைத்து மொழிப் பேசும் வைணவர்களுக்கும் ஆதாரமாகவும் தினப்படி வழிப்பாட்டிற்கும் விளங்குகிறது.
 
 
இவர் [[பெரியாழ்வார்]], [[மதுரகவியாழ்வார்]] ஆகியோர் பாடல்களுக்குத் [[தனியன் பாடிய புலவர்கள்|தனியன்கள்]] பாடியுள்ளார் எனறும் சொல்லப்படுகிறது.
541

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1452959" இருந்து மீள்விக்கப்பட்டது