ஓட்டன் துள்ளல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நடனமுறை: + நடன ஒப்பனை
வரிசை 9:
 
==நடன ஒப்பனை==
வேடம் புனைதல் நடனவகைக்கேற்ப வேறுபடும். ஓட்டன் துள்ளல் நடனமாடுபவர் முகத்தில் [[பச்சை]]ச் சாயம் பூசிக் கொள்வர். [[கண்]]களிலும், [[புருவம்|புருவங்களிலும்]] கரியநிறக் கோடுகளை வரைந்து கொள்வர். மெல்லிய மரத்தாலும், [[புகைமணி]] என்னும் வர்ணக் காகிதத்தாலும், [[மயில்]] இறகுகளாலும் செய்யப்பட்ட அரைவட்டமான முடியைத் தலையில் அணிந்து கொள்வர். மார்பில் கவசம் பூணுவர். இடையில் கோவணங்களால் ஆன [[பாவாடை]]யக்கட்டுவர்யைக் கட்டுவர். ஒரு காலில் கெச்சைமணி அணிவர்.
 
சீதங்கன் துள்ளல் ஆடுபவர், முகத்தில் சாயம் பூசிக்கொள்வதில்லை. கரிய மையினால் கண்களை மட்டுமே கறுப்பாகச் செய்வார்கள். நெற்றியில் வெண்மையான திலகம் இருக்கும். தலையில் வெள்ளைத் துணிக்கு மேல் கருந்துணியைக் கட்டி, அதில் தென்னங்குருத்தோலைகளைக் கொண்டு அணி செய்வார்கள். குருத்தோலைகளால் பாம்பு வடிவமான அணி செய்து, அதனை மார்பில் அணிவர். கிண்கிணிகளையும், [[சலங்கை|சதங்கை]]களையும் இரண்டு [[கால்]]களிலும் அணிவார்கள். சீதங்கன் துள்ளல் ஆட்டம், [[மாலை]] நேரத்திலேயே நடைபெறும். பறையன் துள்ளல் ஆட்டத்தில் [[பாம்பு]] வடிவமான தலை அணியை அணிவார்கள். முகத்தில் சாயம் பூசுவதில்லை. பறையன் துள்ளல் வழக்கமாக்க் காலை நேரத்திலேயே நடைபெறும்.
"https://ta.wikipedia.org/wiki/ஓட்டன்_துள்ளல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது