யாசிர் அரஃபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
==நஞ்சூட்டல்==
இவரது இறப்புத் தொடர்பாகச் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட இவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இவரது ஆடை உட்பட இறப்பின் போது இவரிடமிருந்த பொருட்கள் 2012 இல் சுவிட்சர்லாந்து நாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒன்றில் வேதியியற் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்குப் பொலோனியம்-210 நஞ்சூட்டப்பட்டிருப்பதே என்பதை அவ்வாய்வுகள் உறுதிப்படுத்தின.<ref name="யாகூ">[http://id.berita.yahoo.com/laboratorium-swiss-benarkan-arafat-tewas-diracun-164842519.html யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்கு நஞ்சூட்டப்பட்டமையே].</ref>.
 
பாலஸ்தீனத்தின் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு தனது 21-ஆவது வயதில் தன் சொந்தக் கிராமத்திற்குச் செல்லும் வழியிலேயே விடுதலை இயக்கத்தில் சேர்ந்துவிட்டவர்.
இப்போது அவர் உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு வயது 83. நோய்வாய்ப்பட்டு 2004-இல் தனது 75-ஆவது வயதில் பிரான்ஸ் நாட்டின் இராணுவ மருத்துவமனையில் நினைவு திரும்பாமலேயே இறந்துவிட்டார்.
மூச்சுத் திணற வைக்கும் அவருடைய முழுப்பெயர், முகமது யாசர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்- குத்வா அல்- ஹூசைனி என்பதாகும்.
இவர்தான், இளைஞர் தலைவர் ராஜீவ் காந்திக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று முதலில் அவருக்குத் தொலைபேசி மூலம் தகவல் தந்தவர். ஏறக்குறைய 40 ஆண்டுக்காலம் தன் வீட்டுக்கே செல்லாமல் பாலஸ்தீன விடுதலைக்காகத் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு போரிட்ட தலைவர்.
தமிழீழத்தை இலங்கை ஒப்புக் கொள்ளாதது போல, இஸ்ரேல் நாடு பாலஸ்தீன விடுதலையை ஒப்புக் கொள்ளவில்லை. பாலஸ்தீனத்தின் பாலைப்பூமியில் பைபிளில் சொல்லப்பட்ட புராதன இஸ்ரேல் தேசத்தைக் கண்டறிந்து, அதன் பூர்வக் குடிகளான யூத மக்களைப் பல நாடுகளிலிருந்து அமெரிக்கா முதலிய நாடுகள் ஒன்று திரட்டி, இஸ்ரேல் தேசத்தில் யூத மக்களைக் குடியேற்றி புதிதாக இஸ்ரேல் தேசத்தை உருவாக்கினர்.
1948-ஆம் ஆண்டுவரை வெளியாகியுள்ள தேசப்படங்களில் இஸ்ரேல் என்ற ஒரு தேசத்தைக் காணவே முடியாது. ஏனென்றால், அதுவரை அந்த தேசம் இல்லை. 1949 முதல் வெளியாகிவரும் அட்லஸ்களில்தான் இஸ்ரேல் தேசம் காட்டப்பட்டுள்ளது.
இந்த நவீன இஸ்ரேல்தான் பாலஸ்தீனியர்களை காசாப் பகுதிக்கு விரட்டியடித்தது மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகள் தந்த ஆயுதத்தால் பலமான தேசமாகியது. பாலஸ்தீனியர்களையே விடுதலைக்காகப் போராடும்படியும் செய்துள்ளது.
அது மட்டுமல்ல, பாலஸ்தீனத்தின் புகழ் பெற்ற நகரமான ஜெரூசலம் பகுதியோ பாலஸ்தீனத்திற்குள். ஜெரூசலத்திற்குப் பக்கத்தில் பெத்லஹேம்தான் ஏசுநாதர் பிறந்த ஊர். யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஜெரூசலம் ஒரு புனித நகரமாகும்.
இம்மூன்று பிரிவினருக்கும் அவரவருக்குரிய புனிதத் தலங்கள் அங்கு உள்ளன. மறைந்த யாசர் அராபத் தனது 62-ஆவது வயதில் தன்னிடம் பேட்டி எடுப்பதற்காக வந்திருந்த சுஹா என்ற ஒரு பிரெஞ்சுப் பெண்மணியின் மீது காதல் கொண்டார். உலகறிய அவளையே மனைவியாக்கிக் கொண்டார்.
ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதன் பின்னர் அவருடைய போர்க்குண வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல், அவரை ஆயுத யுத்தத்திலிருந்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மாற்றி விட்டது.
அதனால், தீவிரமாக இவரைப் பின்பற்றிய பாலஸ்தீன இளைஞர்களால்கூட இவருக்கு ஆபத்து நேரலாம் என்று கருதப்பட்டது. அதற்கு மத்தியில்தான் இவர் நோய்வாய்ப்பட்டார். அவரைக் கவனித்துக் கொள்ளும் முழுப்பொறுப்பு அவருடைய மனைவி சுஹாவிடம்தான் இருந்தது.
தன் கணவரைக் குணப்படுத்த அவர் தனது தாய்நாடான பிரான்சுக்கே அவரைக் கொண்டு சென்றார். ஆனாலும் அவர் நினைவு திரும்பாமலே மறைந்தார்.
இப்போது கிடைத்து வரும் செய்தி, அவர் ராணுவ மருத்துவமனையில் இஸ்ரேலியர்களால் ரகசியமாக விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பதாகும்.
இஸ்ரேல் தேசத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அத்தேசம் மறுத்துள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட அவருடைய பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சயனைடு மாதிரி கொடிய பொலேனியம் என்ற நச்சுப் பொருள் அவருடைய உடம்பில் இருந்ததாகக் கூறியுள்ளது.
இதே பொலேனியம் என்ற நச்சுப் பொருளைக் கலந்து ரஷ்ய உளவாளி அலெகசாண்டர் லிட் வினென்கோ என்பவரைக் கொல்ல உபயோகிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. யாசர் அராபத் பிரேதத்தில் இருந்ததும் இதே பொலேனியம்தான்.
யாசர் அராபத்தின் பிரேதம் பாரிசிலிருந்து தனி விமானம் மூலம் பாலஸ்தீனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, ஜெரூசலத்தில் அவரை அடக்கம் செய்யத் திட்டமிட்டார்கள். ஆனால் பிரேதத்தை ஜெரூசலேமுக்குள் கொண்டு வந்தால் பீரங்கிகள் முழங்கும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விட்டது.
அதனால் பாலஸ்தீனத் தலைநகர் ரமலாவில் புதைக்கப்பட்டார். அந்த இடத்திலிருந்துதான் இப்போது அவர் பிரேதத்தைத் தோண்டியெடுத்து இந்த விஷப் பரிசோதனையைச் செய்ய யாசர் அராபத்தினுடைய மனைவி சுஹாவே கோரிக்கை வைத்துள்ளார்.
அராபத் இந்தியாவின் நண்பர். அவருடைய நாடு விடுதலை அடைய வேண்டுமென்று இந்தியா விரும்பியது. அதற்கு ஆதரவளித்தது. சுதந்திரமாகவும், சுயமாகவும் இந்தியா எடுத்த இந்த முடிவை வளரும் நாடுகள் பல வரவேற்றன.
இவ்வாறு, முடிவெடுத்ததற்கு அமெரிக்காவின் நேட்டோ அணி நாடுகளிலோ அல்லது அதற்கெதிரான சீட்டோ அணி நாடுகளிலோ இந்தியா உறுப்பினராக இல்லாமல், மூன்றாம் உலக நாடுகளின் அணியில் செயல்பட்டதுதான் காரணம். பிரான்சு நாட்டிலுள்ள ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த யாசர் அராபத் பொலேனியம் விஷத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற செய்தி எதையோ யோசிக்க வைப்பதாக உள்ளது.
பாலஸ்தீனத்தில் அல்ல, பாரிசில் இது நடந்துள்ளது. சாதாரண மருத்துவமனையிலல்ல, ராணுவ மருத்துவமனையில். சாமான்யனுக்கல்ல, விடுதலைப் புரட்சித் தலைவருக்கு.
இத்தனைக் கட்டுப்பாடுகளையும் மீறி அல்லது ஏமாற்றி எந்த வெளிச்சக்தியும் உள்ளே புகுந்து இந்த மரணத்தை நிகழ்த்தியிருக்க முடியாது.
அப்படியென்றால், ஆபத்து வெளியிலே இருந்து அல்ல, ஆபத்துக்கூட ஆண்டவனைப்போல சுயம்புவாகத் தோன்றும் போல் தெரிகிறது.
உள்ளே இருந்துதான் இந்த உயிர்க்கொலை நடந்திருக்கிறது. உள்ளே இருந்தவர்கள் யார்? சிறப்பு டாக்டர்கள், பயிற்சி பெற்ற நர்ஸ்கள், விநாடிப்பொழுதும் இமை மூடாமல் விழித்துக் கொண்டேயிருந்த யாசர் அராபத்தின் மனைவி சுஹா.
இவர்களையும் மீறி அவருடைய உடம்புக்குள் நஞ்சு புகுந்திருக்கிறது என்றால், அது என்ன நடமாடும் நஞ்சோ! எப்படியென்று ஆராய்ச்சிகள் தொடங்கி விட்டன. எவன் செய்திருப்பான் என்ற யூகங்கள் தொடர்கின்றன.
எது எப்படியோ, பாமர மக்கள் பயமில்லாமல் வாழலாம் போல் தெரிகிறது. தலைவர்களோ, ஒவ்வொரு விநாடியும் தப்பித்துத்தான் வாழ முடியும் போல் தெரிகிறது.
ஏனெனில், கும்பிட்டவனே குண்டு பாய்ச்சியதை மகாத்மா காந்தி கொலையில் பார்த்தோம். மெய்க்காப்பாளனே பொய்க்காப்பாளனானதை திருமதி இந்திராகாந்தி கொலையில் பார்த்தோம். மாலை போட்டவளே மரணத்தையும் போட்டதை ராஜீவ்காந்தி கொலையில் பார்த்தோம்.
நம்ம ஆட்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்களா அல்லது, உலகம் முழுவதிலுமுள்ள இப்பேர்வழிகள் நம் நாட்டிலும் இருக்கிறார்களா என யோசிக்கத்தான் வேண்டும்.
தளபதிகளுக்கு ஆபத்து. தலைவர்களுக்கே அசம்பாவிதம். பாமரர்கள் பாக்கியவான்கள்.
 
http://omsakthionline.com/?katturai=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D&publish=2253
 
பாலஸ்தின விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் பிறந்த தினம் - ஆகஸ்ட் -24!
ஆயுதம் ஏந்தி போராடிய இவர் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒரு வீரர்.
யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். 1929-ஆம் ஆண்டு
பிறந்தார். எகிப்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தபோதே, அரபாத், அரசியல் மற்றும் சமூக ஆர்வலராகிவிட்டார். 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து நடந்த அரபு-இஸ்ரேல் போரின் போது, அரபாத்தின் தந்தையார் கொல்லப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷார் எகிப்தியப் பாலைவனங்களில் கைவிட்ட ஆயுதங்களைத் தேடி எடுத்து, ராணுவப் பயிற்சி மேற்கொண்ட அரபாத், பிறகு, எகிப்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று, சூயஸ் கால்வாய்ப் போர் மற்றும் அதற்குப் பிறகு நடந்த அரபு-இஸ்ரேல் போர் ஆகியவற்றில் களத்தில் செயல்பட்டார். இக்கால கட்டத்தில்தான், அதாவது 1958-ஆம் ஆண்டு, அல்-பத்தா என்ற அரசியல் அமைப்பையும் நிறுவினார்.
1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள் தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான் நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அரபாத்தின் அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக ஆனார்.
1970-ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டிலிருந்து அரபாத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில், பாலஸ்தீனப் போராளிகள் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைககளில் ஈடுபட்ட போதும், அரபாத் அவற்றை விவாதிக்க விரும்பவில்லை, மாறாக 1974-ஆம் ஆண்டு, பரபரப்பான சூழ்நிலையில், ஐநா மன்றப் பொதுச்சபையில் நுழைந்து அவர் உரையாற்றினார்.
தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொருகையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன, எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும் என்று அரபாத் அன்று ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது.
1982-ஆம் ஆண்டு, அப்போது இஸ்ரேலிய ராணுவ அமைச்சராக இருந்த ஷரோன், லெபனானில் இருந்த பாலஸ்தீன நிலைகள், அகதி முகாம்கள்மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து, அரபாத், லெபனான் நாட்டிலிருந்து வெளியேறி த்யூனிசியா நாட்டுக்குச் சென்று தஞ்சம் பெற்று வாழ நேர்ந்தது.
ஆனால், 1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் "இன்டிபாடா" என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து, பாலஸ்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப்போரின் போது, அரபாத், இராக் அதிபர் சதாம் ஹூசைனை ஆதரித்ததால், சதாம் ஹூசைனின் தோல்விக்குப் பிறகு அரபாத், இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது.
1993-ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின் அனுசரணையின் பேரில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வைத்து இஸ்ரேலியப் பிரதமர் இட்சக் ரபினுடன் அரபாத் கைகுலுக்கினார்.
சமரச உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசை, பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால், இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகள்,எருசலேம் நகரின் எதிர்கால நிலை, பாலஸ்தீன அகதிகள் நாடு திரும்புவது ஆகிய பிரச்னைகள் கிடப்பில் போடப்பட்டன.
சமரச உடன்பாட்டை அடுத்து, அரபாத், ரபின், இஸ்ரேலிய அமைச்சர் ஷிமோன் பெரஸ், ஆகியோருக்குக் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், சமரச உடன்பாடு, முறையாகச் செயல்படவில்லை.
மேற்குக் கரை ரமல்லா திரும்பி பாலஸ்தீன நிர்வாக அமைப்புக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்த அரபாத், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலஸ்தீனர்களின் போராட்டம் தொடர்ந்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளாக, அரபாத்தின் ரமல்லா வளாகத்தை இஸ்ரேல் முற்றுகை இட்டிருந்தது. பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வற்ற நிலைதான் இன்னும்.
2004 இல் அராபத்தின் உடல்நிலை சீர்குலைந்ததை அடுத்து, அவர் விமானத்தில் பாரீஸ் நகர் வந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
பாலஸ்தீனர்களின் பிரதான தலைவராக இருந்து வந்த யாசர் அரபாத் மீது, இஸ்ரேலியத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவிர, வேறு பல குற்றச்சாட்டுகளும் இருந்துவந்தன. முக்கியமாக, பாலஸ்தீன நிர்வாக அமைப்பின் மீது சர்வாதிகாரம், ஊழல் போன்ற
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
 
அரபாத்தின் வாழ்க்கை, பல காலம், நாடுவிட்டு நாடுசென்று வாழ்வதாகவே அமைந்தது. ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளில் வாழ்ந்தபோது, பல முறை இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் தீரமிக்க செயல்களில் ஈடுபட்டவர் அரபாத் என்கிறார்கள் அவருடன் இருந்த பாலஸ்தீனத் தலைவர்கள். 1992-ஆம் ஆண்டு லிபியா நாட்டில் அரபாத் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது, அப்போது பதினைந்து மணி நேர காத்திருப்புக்குப் பின் அரபாத் மீட்கப்பட்டார். தம் வாழ்க்கையின் இறுதி மூன்று ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய முற்றுகையில் கழிக்க நேரிட்டதும் முக்கியம்.
யாசர் அரபாத், ஒரு தீவிரப் போராளியாக இருந்த போது, தம்முடைய நடமாட்டங்களை ரகசியமாகவே வைத்திருந்தார். 1990-ஆம் ஆண்டு இவருக்குத் திருமணமான செய்தி கூட, ஓராண்டு ரகசியமாகத் தான் இருந்தது. சுஹா என்ற பாலஸ்தீனப் பெண்மணியை அரபாத் மணந்திருந்தார்.
இவர்களுக்கு, ஸஹ்வா என்ற மகளும் உண்டு.
 
http://www.madawalanews.com/news/vinotha-ulagham/2733
 
யாசர் அரபாத்- பலஸ்தீனத்தின் சிங்கம் !!!
 
அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல் பயணத்திலிருந்து சில குறிப்புகள்.
 
யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். ஆகஸ்ட் . 4, 1929:எகிப்தின் கெய்ரோவில் பிறந்தார்.
 
இவர் மாணவராக இருந்தபோதே அரபாத், அரசியல் மற்றும் சமூக ஆர்வலராக விளங்கினர்.1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வீரராக தோற்றம் பெறுகிறார் .
 
உலக போரின் போது பாலை வனங்களில் கை விடப்பட்ட ஆயுதங்களை தேடி எடுத்து அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் பயிற்சியும் பெற்று வந்தார். பின்னர் எகிப்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றார்.
 
பின்னர் அரபு இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்களில் களத்தில் செயற்ப்பட்ட இவர் 1958 ம் ஆண்டு அல்-பத்தா என்ற அமைப்பை நிறுவினார். 1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள் தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான்நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அரபாத்தின் அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அரபாத் பாலஸ்தீன விடுதலைஇயக்கத்தின் தலைவராக ஆனார்.
 
1970-ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டிலிருந்து அரபாத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால்,லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில், பாலஸ்தீனப் போராளிகள் பல்வேறு நடவடிக்கைககளில் ஈடுபட்டன.
 
1974, நவ. 13: ஐநா சபையில் உரையாற்றினார். அவர் தனது உரையில தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொரு கையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன, எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
 
1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் "இன்டிபாடா" என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து, பாலஸ்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. எனினும் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப் போரின் போது, அரபாத், இராக் அதிபர் சதாம் ஹூசைனை ஆதரித்ததால், சதாம் ஹூசைனின் தோல்விக்குப் பிறகு அரபாத், இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது.
 
இதன் காரணமாக 1993-ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின் அனுசரணையின் பேரில் சமரச உடன்பாடு ஏற்பட்டது.சமரச உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசு பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால், இஸ்ரேல்ஆக்கிரமித்த பகுதிகள்,எருசலேம் நகரின் எதிர்காலநிலை, பாலஸ்தீன அகதிகள் நாடுதிரும்புவது ஆகிய பிரச்னைகள் பெரும் இழுபறியாக அமைந்தது.இதனால் பலஸ்தீனர்களின் போராட்டம் தொடர்த்து .
 
இஸ்ரேலுடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கைக்காக 1994 ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார் . 2004 ஆண்டு அராபத்தின் உடல்நிலை சீர்குலைந்ததை அடுத்து, அவர் விமானத்தில் பாரீஸ் நகர் வந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
 
https://plus.google.com/112373908621358899654/posts/a4BNUfS7dEG#112373908621358899654/posts/a4BNUfS7dEG
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யாசிர்_அரஃபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது