காவ்ரீலோ பிரின்சிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎மேற்கோள்கள்: *விரிவாக்கம்*
வரிசை 23:
குற்ற விசாரணையின்போது பிரின்செப் "நான் யூகோசுலாவிய தேசியவாதி, யூகோசுலாவியர்களை ஒருங்கிணைத்தலே என் நோக்கம்; எந்தவிதமான அரசாக அமைந்தாலும் எனக்குக் கவலையில்லை, ஆனால் ஆத்திரியாவிலிருந்து விடுதலை பெற வேண்டும்" என்று முழக்கமிட்டார்.<ref name=malcolm>{{cite book |last=Malcolm |first=Noel |title=Bosnia: A Short History |publisher=New York University Press |year=1996 |page=153 |isbn=0-8147-5561-5}}</ref>
 
==இளமைக் காலம்==
காவ்ரீலோ பிரின்சிப் அப்போது ''[[சட்டப்படி]]'' [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] அங்கமாக இருந்த ''பொசாங்கோ கிரகோவோவில்'' ஓப்லசாய் என்ற கண்காணா சிற்றூரில் பிறந்தார். ஆனால் இந்த மாநிலம் 1878ஆம் ஆண்டிலிருந்தே ஆத்திரிய-அங்கேரியால் ஆக்கிரமிக்கப்பட்டு ''[[நடைமுறைப்படி]]'' [[பொசுனியா எர்செகோவினா கூட்டாட்சிப் பகுதி|அதன் கூட்டாட்சி மாநிலமாக]] ஆளப்பட்டு வந்தது. பிரின்சிப்பின் தந்தை, பேட்டர், அஞ்சல்துறையில் பணி புரிந்து வந்தார். இவருக்கும் மனைவி மாரியாவிற்கும் ஒன்பது பிள்ளைகள்; இவர்களில் அறுவர் பிறக்கையிலேயே இறந்தனர். பிரின்சிப்பை கவனிக்க இயலாத பெற்றோர் அவரை [[பொசுனியா எர்செகோவினா]]வின் தலைநகரான [[சாரயேவோ]]விலுள்ள அண்ணன் வீட்டிற்கு அனுப்பினர்.
 
அக்டோபர் 6, 1908 இல் பொசுனியா-எர்செகோவினா, 1878இல் ஏற்பட்ட பெர்லின் உடன்பாட்டிற்கு எதிராக, ஆஸ்த்திரோ-அங்கேரிய பேரரசின் அங்கமாக மன்னர் பிரான்சு யோசஃப்பால் அறிவிக்கப்பட்டது. இது செர்பியர்களிடையேயும் தெற்கு ஐரோப்பாவிலிருந்த பிற இசுலாவிய மக்களிடையேயும் எதிர்ப்பை உண்டாக்கியது; உருசிய சார் மன்னரும் இதனை எதிர்த்தார்.
 
இதற்கு எதிராக சாரயோவோவில் பெப்ரவரி 1912இல் நடந்த எதிர்ப்பு போராட்டங்களில் பிரின்சிப் கலந்து கொண்டார். இதனால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை யடுத்து செர்பியத் தலைநகரான [[பெல்கிறேட்]]டிற்கு சென்றார். 1912 - 1913 காலத்தில் பெல்கிறேட்டில் இருந்தபோது பின்னாளில் புகழ்பெற்ற கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் விளங்கிய [[மோம்சிலோ நஸ்டாசியெவிச்]]சுடன் மட்டுமே நட்பு கொண்டிருந்தார்.
 
1912இல் பல செர்பியர்கள் [[முதல் பால்கன் போர்|முதலாம் பால்கன் போருக்கு]] தயாராகிக் கொண்டிருந்தனர். ''ஒற்றுமை அல்லது சாவு'' (''Ujedinjenje ili Smrt'')என்ற ''கருப்புக் கை'' இரகசிய இயக்கத்தின் செர்பிய கரந்தடிப் படையான ''கோமைட்''டில் சேர பிரின்சிப் திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரின்சிப்பை அவரது சிறு உருவத்தைக் காரணமாக்கி கோமைட் சேர்த்துக் கொள்ளவில்லை. தெற்கு செர்பியாவில் பிரோகுப்ல்யே என்றவிடத்தில் அதன் தலைவருடன் நேர்முகம் வேண்டினார். ஆனால் அவரும் பிரின்சிப்பை ஏற்கவில்லை. இந்த ஏமாற்றமே பின்னாளில் செயற்கரிய செயல் செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு தான் எவ்விதத்திலும் தாழ்ந்தவனில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்ற வேட்கையை உண்டாக்கியதாக விளாடிமிர் டெட்யெர் என்பார் கூறுகிறார்.
== மேற்கோள்கள் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/காவ்ரீலோ_பிரின்சிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது