யாழ்ப்பாணக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 4 interwiki links, now provided by Wikidata on d:q2756663 (translate me)
வரிசை 30:
|}}
 
'''யாழ்ப்பாணக் கோட்டை''' யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
 
==போத்துக்கீசர் காலம்==
[[யாழ்ப்பாண அரசு]] [[1619]] இல் [[போர்த்துக்கல்|போத்துக்கீசரின்]] நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை [[நல்லூர்|நல்லூரி]]லிருந்து அவர்கள் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண]]த்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு [[கோட்டை]]யையும் கட்டினார்கள். 1619 [[ஆகஸ்ட்]] மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள [[கோவா]]விலிருந்த தலைமையகத்திலிருந்து [[பிலிப்பே டி ஒலிவேரா]]வுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை [[1625]] ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. [[1629]]இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், [[1637]]இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]த் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், [[வைத்தியசாலை]]யொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் [[யாழ்ப்பாண நகரம்]] கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.
 
==ஒல்லாந்தர் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது